Header Ads



வஸீம் ­கொலை தொடர்பில், முக்கிய தகவல் கிடைத்ததாக நீதிமன்றில் அறிவிப்பு


பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்பட்ட தினத்தில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்து நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் அப்­போ­தைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­டோ­ருக்கு எடுக்கப்பட்ட தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்பில் பல முக்­கிய தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன. 

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் விக்­ர­ம­ச­க­ரவின் கீழ் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்ர விம­ல­சிறி தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் இவை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும், மிக விரைவில் தஜுதீன் கொலை தொடர்பில் இது­வரை வெளிப்­ப­டாத சந்­தேக நபர்கள் தொடர்பில் தக­வல்கள் வெளி­ப்படும் எனவும் நேற்று மன்­றுக்கு அறி­விக்­கப்பட்­டது. பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க இதனை நேற்று மன்­றுக்கு அறி­வித்தார்.

வஸீம் தாஜுதீன் படு கொலை தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்கி முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது இக்­கொலை தொடர்பில் கைதாகி பிணையில் உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­பிக்க பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜ­ராகி இருந்­தனர்.

இந் நிலையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­க­ளுடன் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­நா­யக்க மன்றில் ஆஜ­ரானார். குறித்த கொலை தொடர்­பி­லான விசா­ர­ணையின் தற்­போ­தைய நிலை­மையை அவர் மன்­றுக்கு அறி­வித்தார்.

இதன்­போதே, கொலை இடம்­பெற்ற தினத்தில் ஜனாதிபதி செய­ல­கத்தில் இருந்து நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பல­ருக்கு தொலை­பேசி அழைப்பு எடுக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில்  முன்­னெ­டுக்­கப்பட்ட  விசா­ர­ணை­களில் இந்த விவ­கா­ரத்தில் தொடர்­பு­டைய பல சந்­தேக நபர்கள் தொடர்பில் சாத­க­மான தக­வல்­களை மிக விரைவில் வெளிப்­ப­டுத்தும் கட்­டத்தில் உள்ளோம்.என தெரி­வித்தார்.  

தற்­போதும்  அது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை தொடர்­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். இந் நிலையில் அது தொடர்­பி­லான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க ஆலோசனை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி சமர்பிக்க உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார். 

1 comment:

  1. இலங்கையில் தேர்தல் கதை வந்தால் தாஜுதீன் கதையும் வரும்

    ReplyDelete

Powered by Blogger.