Header Ads



ஹக்கீமின் தாயாரின் மரணவீட்டில், மஹிந்த என்ன சொன்னார் தெரியுமா...?

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்கு மேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஸ மாவை சேனாதிராஜாவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் காலமானதையடுத்து அங்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தவேளை மஹிந்த ராஜபக்ஸவும் மாவை சேனாதிராஜாவும் சந்தித்துக்கொண்டனர்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளதால் அதற்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொது எதிரணி ஆதரவளிக்கவேண்டும் எனவும், மஹிந்தவின் ஒத்துழைப்பு இதற்கு தேவை எனவும் மாவை சேனாதிராஜா நேரடியாக கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஸ இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“நாட்டையும் இனத்தையும் எவருக்கும் தாரைவார்க்க முடியாது, என்ன காரணத்துக்காகவும் நாட்டையும் இனத்தையும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்.

இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்குமேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நான் எதிரானவன் அல்லன். அவர்களை நான் நேசிக்கிறேன். ஆனால், எனக்கு இந்த நாடுதான் முக்கியம். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை'' என்றும் மாவையிடம் காட்டமாக கூறியிருக்கின்றார் மஹிந்த.

No comments

Powered by Blogger.