Header Ads



"போதைப் பொருள் கொண்டு வருபவர்களும், விநியோகிப்பவர்களும் பௌத்தர்கள் அல்ல"

இலங்கையில் போதைப் பொருள் கொண்டு வருபவர்களும், விநியோகிப்பவர்களும் சிங்கள பௌத்தர்கள் அல்லவெனவும், அதனைப் பாவிப்பவர்களே சிங்களவர்கள் எனவும் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கவலை வெளியிட்டார்.

பலாங்கொடயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

உலகத்துக்கு போதைப் பொருள் விநியோகம் மேற்கொள்ளும் கேந்திர மையம் இலங்கை என சர்வதேச அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. இந்த நாட்டிலுள்ள அரசியல் வாதிகளுக்கு இந்த அபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியாது. இதனைப் பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியாது.

ஐந்து வருட ஆட்சிக்கு வந்தவர்கள் எவ்வாறு 99 வருடங்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வது?. எமது எதிர்கால சந்ததியினரை அடமானம் வைக்க அவர்களுக்கு இடமளிக்க  முடியாது. நாம் ஜனநாயகத்தைப் பெறவில்லை. அதன் பெயரில் அதற்குப் பகரமாக வேறு ஒன்றையே பெற்றுள்ளோம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

-Dc-

4 comments:

  1. குற்றவாளி எந்த மதத்தை மார்கத்தை அடையாளம் காட்டினாலும் அவன் எவ்வகையிலும் குற்றவாளிதான் அவனுக்கு சட்டம்நிறைவேற்றும் பொறுப்பு உங்களிடம் தரப்பட்டது அந்த அமானிதத்தை நீங்கள் வீனாக்கி ஒரு குற்றவாளியாக பிரகடனபடுத்தப்பட்டுள்ளீர்,மேலும் பெரும் குற்றச்செயலகளை செய்தவர்களை காப்பாற்றி இருக்கின்றீர் இதுதான் நீங்கள் மக்களுக்காக செய்த நன்றிகடன்.

    ReplyDelete
  2. நல்ல பிள்ளை போங்கோ

    ReplyDelete
  3. Racism mixed with your blood and you mise use your power also why you didn't arrest them at the time mean while you protect BBS

    ReplyDelete
  4. vele sudha sinhala bouddan allayo!!!!

    ReplyDelete

Powered by Blogger.