Header Ads



ஆங்சாங் சூகி வழங்கிய யானையை, தலதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்த ஜனாதிபதி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆட்சியில் இருந்த முன்னாள் தலைவர்களுக்கு மாத்திரமல்லாது ஆட்சிக்கு வரவுள்ள தலைவர்களுக்கும் நல்ல முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாக மல்வத்து பௌத்த பீடத்தின் அநுநாயக்கர் திம்பும்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

மியன்மார் அரசாங்கம் தனக்கு வழங்கிய யானையை ஜனாதிபதி தலதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்தார், ரஷ்யா வழங்கிய வாளை தேசிய அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.

வெளிநாடுகள் தனக்கு வழங்கும் பெறுமதியான பரிசுகளை ஜனாதிபதி பொதுமக்களின் நலனுக்காக வழங்கும் போது சில அரசியல்வாதிகள் தமக்கு கிடைக்கும் பரிசுகளை தனிப்பட்ட அருங்காட்சியங்களில் வைத்துக்கொள்வதாகவும் விமலதம்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இன்று மல்வத்து மஹா விகாரையில் தேரரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Sri Lanka’s president Maithripala Sirisena received an elephant that was donated by the State Counsellor of Myanmar Aung San Suu Kyi, offering it to a Buddhist temple in Kandy.

In a religious ceremony at Kandy on Friday, Mr Sirisena donated the elephant named “Pan Shwe Maung” to the Temple of the Sacred Tooth Relic, after receiving blessings from Buddhist monks.

Several senior monks participated in the ceremony.

The elephant arrived from Myanmar last month after Mr Sirisena reportedly made a request to Ms Aung San Suu Kyi when they met at the BRICS-BIMSTEC outreach summit held in India.

1 comment:

  1. இந்த யானை பரிசு உங்களுக்கும் சேர்த்து தான்.

    நீங்கள் தெரிவு செய்தனுப்பிய 20+ MP களும் இன்னமும் தொங்கிகொண்டிருக்கும் அரசு தானே இது.

    பரிசு பெற்றால் நன்றி தெரிவிக்கிறது தானே நற்பண்பு.

    ReplyDelete

Powered by Blogger.