Header Ads



ஹக்கீமும், றிசாத்தும் தலையாட்ட முஸ்லிம்களுக்கு பாதகமான, தேர்தல் சட்டம் நிறைவேறியது

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச்  சட்டத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் பதிவாகின.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்போதே இது நிறைவேற்றப்பட்டது.

முலிம்களுக்கு இந்தச் திருத்தச்சட்டம் பாதிப்புகளை ஏற்படுத்துமென பல தரப்புகளும் சுட்டிக்காட்டியிருந்தன.

எனினும் அவற்றை எல்லாம் கவனத்தில் எடுக்காது இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஹக்கீம் மற்றும் றிசாத்துடன் அவர்கள் கட்சி சார்பானவர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

1 comment:

  1. 60%தொகுதி மற்றும் 40%வீதாசரம் என்று கொண்டுவரப்பட்ட சட்டமூலம்.மனோகணேசன் ஹக்கீம் போன்ற செயல்திறன் மிக்க தலைவர்களால் 50%க்கு 50% என மாற்றப்பட்டு நிறைவேறியது.இந்த வெற்றிக்கு சில சேம்பேறிகள் உரிமை கோரமுற்படுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.