Header Ads



4 இலட்சம் ரோஹின்யர்கள் பங்களாதேஷ் வந்தடைவு - பெரிய முகாம்களை அமைக்க திட்டம்

அண்டை நாடான மியான்மரில் இருந்து தப்பிவரும் 4 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு உறைவிடங்களை அமைக்கும் திட்டங்களை வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது.

14 ஆயிரம் உறைவிடங்களை வங்கதேச படையும். உதவி நிறுவனங்களும் சேர்ந்து அமைக்கவுள்ளன. ஒவ்வொரு உறைவிடமும் 6 குடும்பங்களை உள்ளடக்கும் வீடுகளை கொண்டு கோஸ் பஜார் நகருக்கு அருகில் அமையவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியான்மர் அரசின் வன்முறை தாக்குதல்களில் இருந்து தப்பித்து சுமார் 4 லட்சம் ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசம் வந்திருப்பதாக நம்பப்படுகிறது.

மியான்மர் நடத்துகின்ற இந்த நடவடிக்கையை இன சுத்திகரிப்புக்கு இட்டுசெல்லலாம் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது,

ரோஹிஞ்சாக்களின் கிராமங்களை மியான்மர் ராணுவம் தீ வைத்து எரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஆனால், ஆயுதப்படையினர் மீது பதில் தாக்குதல் நடத்துவதாகவும். பொது மக்களை இலக்கு வைத்து தாக்கவில்லை என்றும் மியான்மர் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், கடந்த வாரங்களில், வங்கதேச வான்பரப்பில் விதிமீறல்களை நடத்தியுள்ளதாக வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையில் ராஜீய சர்ச்சை புதிதாக தொடங்கியுள்ளது.

வங்கதேசத்தின் நாளேடான 'ஸ்டார்' செய்தித்தாளின்படி, இந்த புதிய உறைவிடங்கள் 8 சதுர கிலோமீட்டர் (3 சதுர மைல்) நிலப்பரப்பில் அமைக்கப்படும். இது மியான்மரில் இருந்து வந்த அகதிகளால் நிறைந்திருக்கும் முகாம்களுக்கு அருகில் அமைக்கப்படவுள்ளன.

8 ஆயிரத்து 500 தற்காலிக கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. 14 தற்காலிக கிடங்குகள் உறைவிடங்களுக்கு அருகில் அமைக்கப்படும் என்று இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

மியான்மரில் இருந்து தப்பி வந்தோர் சிலர் கொண்டிருக்கும் வடுக்கள் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டவை என்று அவர்கள் கூறுகின்றனர்.

மியான்மரில் இருந்து தப்பி வந்தோர் சிலர் கொண்டிருக்கும் வடுக்கள் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டவை என்று அவர்கள் கூறுகின்றனர்

வங்கதேசத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளரை மேற்கோள்காட்டி, இவ்விடம் 4 லட்சம் மக்களுக்கு போதுமானதாக இருக்கம் என்று அரசு நம்புவதாக எஃஎபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது 10 நாட்களில் கட்டப்படயிருக்கிறது.

அகதிகளாக வந்துள்ள குழந்தைகள் பலருக்கும் ரூபல்லா மற்றும் போலியே தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் சனிக்கிழமையில் இருந்து தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.