Header Ads



2 குற்றவாளிகளுக்காக ஒரேநாளில், பிக்குகள் திரட்டிய 15 இலட்சம் ரூபா


கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.

அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய இவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்த கொழும்பு மேல் நீதிமன்றம், இரண்டு பேரும் தலா 50 இலட்சம் ரூபாவை இழப்பீடாகவும், 20 இலட்சம் ரூபாவை தண்டமாகவும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இழப்பீடு மற்றும் தண்டப்பணத்தை செலுத்தாவிடின், மேலும் 3 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு, மற்றும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான நிதியை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி, பௌத்த பிக்குகள் மூலம் திரட்டி வருகிறது.

பிண்டபாத என்ற பாதயாத்திரை மூலம் கொழும்பில் பௌத்த பிக்குகள் நேற்று நிதி திரட்டினர். நேற்று மாத்திரம், 1.5 மில்லியன் ரூபா திரட்டப்பட்டதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

நேற்றைய நிதி திரட்டும் நடவடிக்கையில்  350 பிக்குகள் ஈடுபட்டதாகவும், அடுத்த கட்டமாக நாளை கிரிபத்கொடவில் இந்த நிதி திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Our country will go to drain by monk

    ReplyDelete
  2. Monks should not be allowed to do politics as it will create numerous undesirable things in the country. Politicians should not be allowed to make political speeches in the temples.

    ReplyDelete
  3. இலங்கை நாட்டு நீதிமன்றம் அநியாயம் செய்து இந்த கள்ளர்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாக இந்த காவிவுடையுடன் அழையுந்து திருடர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கும் இவர்கள் மக்களை மடையர்காளாக்க முயற்சிக்கின்றார்கள்,புத்தமதத்தை போதிக்கிம் சாமிகளே களவு செய்ய ஏனையவர்களையும் தூண்டுகின்றார்கள் எப்படி புத்தியுள்ளமக்கள் இந்த சாதுகளின் பின்பு செல்வார்கள் அவர்கள் சொல்வதை கேட்பார்கள்!

    ReplyDelete
  4. இலங்கையில் இருக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகள் எல்லோருக்கும் சென்று பன்சலையில் இருக்க சொல்ல வேண்டியாது தான் அதற்கு எதிர்மறையாக பன்சலை சாதுமார்கள் எல்லோருக்கும் வந்து பாராளுமன்றம் வந்து இருக்க சொல்லவேண்டியது தான் .

    ReplyDelete

Powered by Blogger.