Header Ads



'தோப்பாகிய தனிமரம்' - அஷ்ரப்பின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர், மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப்பின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு 'தோப்பாகிய தனிமரம்' என்ற மகுடத்தில் சனிக்கிழமை (16) மாலை 4.00 மணிக்கு பொத்துவில் அஷ்ரப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வுக்கு பொத்துவில் அமைப்பாளர் அப்துல் வாசித் தலைமை தாங்குவார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஷேட உரையாற்றுவார். எழுத்தாளர் உமா வரதராஜன், மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா, சிறுகதை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோரும் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி வௌ;வேறு தலைப்புகளில் உரையாற்றுவர். 

அத்துடன், மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் பற்றிய ஆவணப்படம் ஒன்றும் அங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 'அழகிய தொனியில் அல்குர்ஆன்'  போட்டியில் வெற்றிபெற்றவர்களின் மீள் அரங்கேற்றமும் பிரமாண்டமான மேடையமைப்புடன் ஒலி, ஒளி நிகழ்வாக அங்கு இடம்பெறவுள்ளது. 

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் 
ஸ்ரீ.ல.முகா தலைவர் அமைச்சர் 
ரவூப் ஹக்கீமின் ஊடக ஆலோசகர் 

2 comments:

  1. Rauf. Stop selling Ashraf for your own political advantage. Please let him in peace. Do not make him into pieces. please.............

    ReplyDelete
  2. Allah knows best, what they were doing, and are currently doing.
    so many disaster for Muslim Ummah in the world , anyway waiting for Judgment day , then you will know.

    ReplyDelete

Powered by Blogger.