Header Ads



இஸ்லாத்தை ஏற்ற யுவதி, பெற்றோரும் அனுமதி - IS இல் இணைவதாக பொய் சொன்ன பொலிஸார்

-M.I.Abdul Nazar-

மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் படிப்­ப­தற்­காக வெளியில் சென்ற ஆயிஷா, என அழைக்­கப்­படும் அதிரா இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொண்டார். ஆயிஷா தான் விரும்பி ஏற்ற மார்க்­கத்தை பின்­பற்­று­வ­தற்கு தடை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என அவ­ரது இந்து மத பெற்­றோரால் கடந்த திங்கட்கிழமை நீதி­மன்­றத்தில் உறுதிமொழி அளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவரை பெற்­றோ­ருடன் செல்­லு­மாறு மன்று அறி­வு­றுத்­தி­யது.

மேலும் ஆயிஷா இஸ்­லா­மிய கற்கை நெறி­யினைத் தொடர்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிப்­ப­தா­கவும் அவ­ரது பெற்றோர் உறு­தி­ய­ளித்­ததைத் தொடர்ந்து அவர் தனது பெற்­றோ­ருடன் சென்றார். 

ஆயிஷா கடந்த 27 ஆம் திகதி கன்­னூ­ரி­லுள்ள பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து ஹொஸ்டர்க் நீதி­மன்­றத்­தினால் மகளிர் இல்­லத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்டார். 

அவ­ரது பெற்றோர் தனது பிள்­ளையை தம்­மிடம் தரு­மாறு கோரி­ய­த­னை­ய­டுத்தே நீதி­மன்ற ஆணை வழங்­கப்­பட்­டது. 
தான் விரும்­பியே இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவும் தனது கல்­வியைத் தொடர விரும்­பு­வ­தா­கவும் ஆயிஷா நீதி­மன்­றத்தில் தெரி­வித்தார்.  

ஆயி­ஷாவின் பெற்­றோரும் அவ­ரது விருப்­பத்­திற்கு அமை­வாக சமய அனுஷ்­டா­னங்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு எவ்­வித தடை­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என உறு­தி­ய­ளித்­தனர். 

எனினும் குறித்த சிறுமி ஐ.எஸ்.தீவி­ர­வாதக் கொள்­கை­களினால் கவ­ரப்­பட்­டி­ருக்கக் கூடும் என பொலிஸார் நீதி­மன்­றத்தில் சுட்டிக்காட்­டினர். 

ஆயிஷா கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி கச­றாகோட் மாவட்­டத்தின் உடு­மா­வி­லுள்ள தனது இல்­லத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்தார். வீட்­டை­விட்டுச் செல்­வ­தற்கு முன்­ன­தாக இஸ்­லாத்­தின்பால் தான் எவ்­வாறு ஈர்க்­கப்­பட்டேன் என்றும் இஸ்லாம் தொடர்­பான தனது அனு­ப­வங்­க­ளையும் 15 பக்­கங்கள் கொண்ட கடி­த­மொன்றில் எழுதி வைத்­தி­ருந்தார். 

வீட்­டை­விட்டு வெளி­யே­றிய பின்னர் தனது தாய்­வழி மாமா­வுடன் தொடர்பு கொண்ட ஆயிஷா பெற்றோர் வீட்டில் தன்னை நிம்­ம­தி­யாக இருக்க விட­மாட்­டார்கள் என அஞ்­சு­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

கன்­னூ­ரி­லுள்ள பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­ததன் பின்னர் உள்ளூர் ஊட­க­மொன்­றிற்கு கருத்துத் தெரி­வித்த ஆயிஷா, கன்­னூ­ரி­லுள்ள சினே­கிதி ஒரு­வ­ரது இல்­லத்தில் தான் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும், இஸ்­லாத்­தினை தொடர்ந்து பின்­பற்­று­வ­தற்கு தனது பெற்றோர் அனு­ம­திப்­பார்­க­ளாயின் அவர்­க­ளோடு செல்­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். எந்த வித வற்­பு­றுத்­த­லு­மின்றி தான் சுய­மா­கவே இஸ்­லாத்தைத் தழுவிக் கொண்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

'நான் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்­ளப்­போ­கிறேன் என பல குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நான் இது வரை எனது கட­வுச்­சீட்­டைக்­கூட பெற்­றுக்­கொள்­ள­வில்லை. என்னை ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­ப­டுத்திக் கதைப்­ப­தை­யிட்டு நான் கவ­லை­ய­டை­கின்றேன் ஐ.எஸ்.அமைப்­புடன் எனக்கு எவ்­வித தொடர்பும் கிடை­யாது. நான் எனது பெற்­றோரை நேசிக்­கின்றேன். என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் வசிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் நான் இஸ்லாத்தை கற்றுக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த பல ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைக் கற்று வருகின்றேன். முன்னர் அதனை பெற்றோர்கள் அங்கீகரித்துமிருந்தனர்' என அவர் மேலும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.