August 15, 2017

முஸ்லிம் மாணவியின் Bluetooth - தமிழ் மீடியாக்களின் போலிமுகம்

(சம்மாந்துறையில் இருந்து Dr A.I.A.Ziyad)

கடந்த இரு தினங்களாக சில தமிழ் இணைய செய்தி தளங்களில் வெளியாகி Whatsapp , Facebook தளங்களில் விமர்சனத்துக்கு உட்பட்டு போலியாக பரப்பப்பட்டு வரும் ஒரு செய்தி.

"அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை உயர்தர பரீட்சைக்காக மாணவி ஒருவர் தோற்றி இருந்தார்.
இந்த நிலையில் குறித்த மாணவி தனது உடல் தெரியாத வகையில் தமது கலாச்சார உடையுடன் (ஹபாயா) வந்திருந்தார்.

பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மாணவியை பிரத்தியேக அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்ட நிலையில் மாணவியின் காதில் செயல்பாட்டில் இருந்த வண்ணம் புளுடூத் ஹெட் செட் (bluetooth headset) இயங்கிக் கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பரீட்சை குறித்த சகல செயற்பாட்டில் இருந்தும் மாணவி இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இப்பிரதேசத்தில் கடந்த 2016 ஆண்டு மருத்துவ துறைக்கு 23 மாணவிகள் சிறப்பு சித்தி பெற்றி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது."

என்று தொடர்கிறது அந்த செய்தி. இது எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி நாட்டில் இருக்கும் குழப்ப நிலையை சாதகமாகிக்கொண்டு புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை.

இவ்விடயத்தில் மாணவியின் பெயரோ , பாடசாலையின் பெயரோ குறிப்பிட படவில்லை.

பொதுவாக தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தமிழ் மொழி மேற்பார்வையாளர்களே கடமை புரிவது வழக்கம். இங்கு வேண்டுமென்றே சிங்கள மொழி மூல  மேற்பார்வையாளர் கடமை புரிந்ததாகவும் அவருக்கு சந்தேகம் வந்து போலீசாரை பரீட்சை மண்டபத்துக்கு அழைத்தார் என்பது நடைமுறை சாத்தியமில்லாத அப்பட்டமான பொய். இதை விட ஜீரணிக்க முடியாத பொய் பரீச்சையின் இடை நடுவே மாணவி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது "கேட்பவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடு aeroplane ஓட்டுமாம்" போன்றது.

இருக்க இது தொடர்பாக சம்மாந்துறை zonal Education Director ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது  (தொலைபேசி இல 067-2260701) இது ஒரு அப்பட்டமான பொய் என்று உறுதி செய்தார்.

மேலும் இதனை உறுதி செய்ய சம்மாந்துறை போலீஸ் பொறுப்பதிகாரி Mr Upul pialal (Chief Inspector ) (தொலைபேசி இல 67 226 0222) அப்படி எந்த ஒரு முறைப்பாடுகளும் வரவே இல்லை என மறுத்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க இந்த ஊடக செய்தியின் உண்மை தன்மை அறியாமல் எமது சகோதரர்களே மிகவும் கேவலமான முறையில் விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது.

தயவு செய்து கிடைக்கும் செய்திகளின் உண்மை தன்மை அறிந்து Share or Comments செய்யுங்கள்.

2 கருத்துரைகள்:

naan karatheevil vipilaanathan school il exam eluthum pothu antha tamil instactor thondu koduth elutha sonnaar innoru tamil maanavi thanathu thuppaddaavil eluthi irunthaar athanai antha athikaari kandum kaanaathavan pol irunthaar intha paarthu eluthu padikkum palakkam engalukku illa
therivaagum maanavigalai oru pothuvaana idathil vaithu exam athe papara elutha sollunga

உடனடியாக குறித்த ஊடகத்திற்கெதிராக சம்மாந்துறை சிவிலமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்தல் வேண்டும்

Post a Comment