Header Ads



உள்ளுர் ஷிஆக்களுடன் போராடும், சவூதி அரேபியா


சவூதி அரேபியாவின் கிழக்கு நகரொன்றில் பாதுகாப்பு படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் கடந்த பல வாரங்களாக நீடிக்கும் மோதலை அடுத்து அந்த நகரில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.

அவாமியா நகரின் குறுகிய தெருக்கல் உள்ள பகுதியை ஷியாகள் தனது மறைவிடமாக பயன்படுத்துவதாக கூறி அந்த பகுதியை இடிக்க சவூதி நிர்வாகம் கடந்த மே மாதம் தொடக்கம் முயன்று வருகிறது.

எனினும் பாதுகாப்பு படையினர் குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போதைய பதற்றம் நீடிக்கும் சவூதியின் கிழக்கு மாகாணம் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியாகும். நீடிக்கும் மோதல்களில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் சவூதி படை வீடுகள், கார்கள் மீது தொடர்பின்றி சூடு நடத்துவதாகவும் இதனால் கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும் உள்ளுர் செயற்பாட்டாளர்கள் விபரித்துள்ளனர்். அவாமி நகர் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையில் இருப்பதாகவும் அங்குள்ள குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

3 comments:

  1. Shia Sunni issues should be settled by discussion. Intellectual discussion s instead of armed struggle.

    ReplyDelete
  2. Killing each other is the hobby of Arabians

    ReplyDelete
  3. Às RSS And BJP is doing in North part of India and ku jar at in past. Thanks for Ajanta to remind this

    ReplyDelete

Powered by Blogger.