Header Ads



வன்முறையை தூண்டுகிறதாம் அல் ஜஸீரா - தடை விதிக்கிறது இஸ்ரேல்


கட்டாரை தளமாகக் கொண்ட அல் ஜஸீரா ஒளிபரப்பு நிறுவனத்தின் ஜெரூசலத்தில் உள்ள அலுவலகத்தை மூடுவதற்கு இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த தொலைக்காட்சி தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் தொலைத்தொடர்பு அமைச்சர் அயுப் காரா, அதன் ஆங்கில மற்றும் அரபு சேவை இரண்டும் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அல் ஜஸீரா வன்முறையை தூண்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குற்றம்சாட்டுகிறார்.

இந்த முடிவுக்கு அல் ஜஸீரா கண்டனம் வெளியிட்டுள்ளது. எனினும் பல சுன்னி அரபு நாடுகளும் அல் ஜஸீரா மீது எடுத்த முடிவின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது. கட்டாருடனான அண்டைய நாடுகளின் இராஜதந்திர முறுகளில் கட்டார் நிதியில் இயங்கும் அல் ஜஸீரா இலக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல் ஜஸீரா வலையமைப்பை நிறுத்துவதற்கு கேபிள் தொலைக்காட்சி வழங்குனர் இணங்கி இருப்பதாக காரா குறிப்பிட்டுள்ளார். எனினும் அதன் ஜெரூசலம் அலுவலகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

எதேச்சதிகார அரபு அண்டை நாடுகளுடன் நெதன்யாகுவும் சுதந்திர ஊடகத்திற்கு ஏதிராக கூட்டணி சேர்ந்திருப்பதாக அல் ஜஸீராவின் ஜெரூசலம் தலைமை ஆசிரியர் குற்றம்சுமத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.