Header Ads



முஸ்லிம்களின் உடல் உறுப்புகளை, கொள்ளையடிக்கும் இஸ்ரேல்


சிரியாவில் யுத்தம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை கொல்லப்பட்டவர்களில் 18,000 பேரின் உடல் உறுப்புகளை இஸ்ரேல் அறுவடை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தொடங்கிய 2012 ஆம் ஆண்டு முதல் 6.5 மில்லியன் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

மட்டுமின்றி 4.8 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு அண்டை நாடுகளான துருக்கி மற்றும் லெபனன் நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். சிரியாவின் மொத்த மக்கள் தொகையான 22 மில்லியனில் சுமார் 11.7 மில்லியன் மக்கள் குடியிருப்பையும், வாழ்வாதாரத்தையும், உயிரையும் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் டமாஸ்கஸ் பல்கலைக்கழக மருத்துவக் குழு மருத்துவர் ஒருவர் வெளியிட்ட தகவல் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சிரியா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களில் 18,000 பேரின் உடல் உறுப்புகளை இஸ்ரேல் அறுவடை செய்து மில்லியன் டொலர்கள் பணம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2001 ஆம் ஆண்டு வெளியான தகவலின் அடிப்படையில் உலகில் உடல் உறுப்புகளை தானமாக பெறும் நாடுகளில் முக்கிய இடத்தில் இஸ்ரேல் இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இஸ்ரேல் அரசு 80,000 டொலர் அளவுக்கு மானியம் வழங்கி வெளிநாடுகளில் குறித்த சிகிச்சையை மேற்கொள்ள உதவி செய்தது.

இருப்பினும் உடல் உறுப்புகள் கடத்தலில் இஸ்ரேல் குடிமகன்கள் பலர் ஈடுபட்டு வந்தனர். கடந்த 1984 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டவர் ஒருவர் அமெரிக்காவில் சிக்கியுள்ளார். நீதிமன்ற விசாரணையும் தண்டனை காலமும் முடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் விடுதலை பெற்றுள்ளார்.

பெரும்பாலும் சிரியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் உள்ள சிறு மருத்துவமனைகளில் இதுபோன்ற சட்டவிரோத உடல் உறுப்பு கொள்ளை நடைபெற்று வருவதாகவும் இதில் இஸ்ரேலிய நாட்டவர்களின் பங்கு முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.