Header Ads



பர்தாவிற்குள் யார் இருக்கிறார்கள்..?


நோர்வேயில் புகைப்படம் ஒன்றை தவறாக புரிந்துக்கொண்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பேஸ்புக் குழுவை சேர்ந்த பலர் சரமாரியாக இஸ்லாமியவாதத்தை விமர்சித்துள்ளனர்.

Fedreland viktigst என்ற பேஸ்புக் பக்கத்தில் Johan slattavik என்ற நபர், இது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற தலைப்பில் பேருந்து ஒன்றில் இருக்கைகள் காலியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நூற்றுக்கணக்கானவர்கள், பேருந்து முழுவதும் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் இருப்பதாக தவறாக புரிந்துக்கொண்டு இஸ்லாமியவாதத்திற்கு எதிரான பல கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

அந்த பர்தாவிற்குள் யார் இருக்கிறார் என உங்களுக்கு தெரியாது. ஆயுதங்களுடன் தீவிரவாதி இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், இந்த புகைப்படத்தை பார்க்க பயமாக இருக்கிறது. இதன் மூலம் பர்தாவுக்கு எதிரான தடை தேவை என்று ஆதாரம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் பர்தா மற்றும் மற்ற முகம் மூடும் முக்காடுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த யூன் மாதம் நோர்வேயில் பர்தா தடை முன்மொழியப்பட்டது.

இந்நிலையில் புகைப்படத்தையும் அதற்கு பலர் பதிவிட்டு கருத்துகளை புகைப்படமாக பதிவிட்ட Sindre Beyer என்ற நபர் கூறியதாவது,

பேருந்து ஒன்றில் இருக்கைகள் காலியாக இருக்கும் புகைப்படம் வெறுக்கத்தக்க பேஸ்புக் குழுவிற்கு அனுப்பப்படும் போது கிட்டத்தட்ட என்னென்ன நடக்கிறது, அவர்கள் அனைவரும் பர்தாவுடன் ஒரு கூட்டத்தை பார்க்கிறார்கள் என நினைக்கிறார்கள்.

தவறுகளை பகிர்ந்து கொண்டதாக கூறிய Sindre Beyer, இதனால் வலைதளங்களின் இருண்ட மூலைகளில் என்ன நடக்கிறது என்பதைப் மக்கள் பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. we are fallowing the law of creator, why we have to consider about foolish comments of others.

    ReplyDelete
  2. Not a foolish thoughts it's true
    Who behind the nikab
    No one don't know
    It's a big big problem for every society even a Muslim too

    ReplyDelete
  3. Not a foolish thoughts it's true
    Who behind the nikab
    No one don't know
    It's a big big problem for every society even a Muslim too

    ReplyDelete

Powered by Blogger.