Header Ads



உலகில் வாழ மிகவும் பொருத்தமான, நகரங்களில் கொழும்பு

உலகில் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான நகரங்களின் பட்டியலில் கொழும்பும் இணைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகில் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான நகரங்களில் கொழும்பு முன்னேற்றம் கண்டுள்ளது.

2017ஆம் ஆண்டிற்கான The Economist Intelligence Unit தரப்படுத்தலுக்கமைய இலங்கையின் கொழும்பு நகரம் இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் கொழும்பு சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, விசேடமாக உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்பு நகரில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

140 நகரங்களின் தரவரிசையில் 124 வது இடத்தை கொழும்பு பெற்றுள்ளது. அதற்கமைய கொழும்பு நகரத்திற்கு நூற்றுக்கு 51 புள்ளிகள் கிடைத்துள்ளது.

உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த தரப்படுத்தல் வெளியிடப்படுகின்றது.

தொடர்ந்து ஏழாவது வருடமும் இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் Vienna நகரமும் மூன்றாவது இடத்தில் கனடாவின் Vancouver நகரமும் நான்காவது இடத்தில் Toronto நகரமும் காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவின் Adelaide நகரமும் கனடாவின் Calgary நகரமும் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.