Header Ads



திங்கட்கிழமை பூரண சூரிய கிரகணம்

எதிர்வரும் 21ஆம் திகதி, பூரண சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாக, இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது.  

அமெரிக்காவில் முழுமையாகக் காணக்கூடிய வகையில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரைவாசியாக தென்படும்.  

1955ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்துக்குப் பின்னர் ஏற்படும் முழுமையான கிரகணம் இதுவாகும். இந்த சூரிய கிரகணம் காரணமாக அமெரிக்காவில் முழுப் பகலும் இரவாகக் காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதேவேளை, அடுத்த முழுமையான சூரிய கிரகணம், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஏற்படவுள்ளது. இந்தச் சூரிய கிரகணம் தென் அமெரிக்க பகுதியில் தென்படவிருப்பது முக்கிய அம்சமாகும்.  

இதனிடையே அதே வருடம் டிசெம்பர் மாதம் ஏற்படும் வலய சூரிய கிரகணத்தை, இலங்கையில் தெளிவாகக் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.