Header Ads



கொழும்பில் இரகசிய கமராக்கள்

வீதி விதி­க­ளுக்கு முர­ணான வகையில் வாக­னங்­களை செலுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு விரைவில் பெருந்­தெ­ருக்­களை அண்­மித்­த­தாக ஆங்­காங்கே இர­க­சிய கெம­ராக்­களை பொருத்தும் செயற்­றிட்­ட­மொன்றை ஆரம்­பிக்க பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

இதன் முதற்­கட்­ட­மாக கொழும்பு நகரை மையப்­ப­டுத்தி  மேல்­மா­கா­ணத்தில் இத்­திட்டம் ஆரம்பிக் கப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் போக்­கு­வ­ரத்துப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரி­வித்­துள்ளார்.

வாக­னங்கள் மற்றும் மக்கள்  எண்­ணிக்­கைய அதிகம் காணப்­படும் நக­ர­மான கொழும்பு நக­ரி­லேயே அதி­க­ளவில் வீதி விதி­முறை மீறல்கள் இடம்­பெ­று­வ­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை, வீதி­முறை விதி மீறல் தொடர்­பாக தற்­போது காணப்­படும் சட்­டத்­தினை கடு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

வேக வரை­யறை சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­கையில் கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருந்த சிக்கல் நிலை மற்றும் வேக அள­வீட்டு கரு­வி­களில் ஏற்­பட்­டி­ருந்த கோளா­று­களை தவிர்த்துக் கொள்­வ­தற்கு தற்­போது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கணி­ச­மான அளவு லேசர் வேக வரை­யறை அள­வீட்டு கரு­விகள் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

அவ்­வாறே பெரும்­பா­லான  பிர­தான வீதிகள் பலவற்றில் வேக வரையறை சமிக்ஞை குறியீடுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் பொருத்தப்பட்டுள்ளதாகவும்   பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.