Header Ads



ஞானசாரரின் பின்னால் நல்லாட்சி...

ஜனாதிபதி மைதிரிபாலவின் வெற்றிக்காக உழைத்தவரும் ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றவருமான வலப்பனை சுனங்கள தேரர் ஞானசார தேரருடன் ஜப்பான் சென்றுள்ளமையானது ஞானசார தேரரின் பின்னால் இந்த நல்லாட்சியே இருப்பதாக நாம் இவ்வளவு காலம் கூறிவந்தது மேலும் நிரூபனமாகியுள்ளது.

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படு வந்த ஞானசார தேரருக்கு மூன்று வழக்குகளில் இரண்டு மணி நேரங்களுக்குள் பிணை வழங்கப்பட்டது இது இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

ஞானசார தேரரை பாதுகாத்த பின்னணியில் ஜனாதிபதி இருந்ததாக நாம் கூற முன்னர்  அஸாத் சாலியே கூறியிருந்தார்.அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைதிரிபாலவின் வெற்றிக்காக உழைத்தவரும் அவரது அலோசகருமான வலப்பனை சுனங்கள தேரர் ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றார்.

அதே தேரர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல்  ஜப்பான் சென்றுள்ள ஞானசார தேரருடன் ஜப்பான் சென்றுள்ளமையானது நாம் இவ்வளவு காலம் கூறிவந்த விடயங்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது.

நல்லாட்சியாளர்கள் 2012 இல் திட்டமிட்ட ஆட்சி கவிழ்பு சதிதிட்டத்தில் ஒரு அங்கமாக  பொதுபல சேனா இருந்துள்ளது என்பதையும் ஒருபுறம் அவர்களை மஹிந்த குடும்பத்துடன் ஒட்டி உறவாட செய்துவிட்டு மறுபுறம் அவர்களை கொண்டு முஸ்லிம்களை தாக்கியதும் திட்டமிடப்பட்ட சதி என்பதையும் தற்போது ஞானசார தேரரை காப்பாற்ற இவ்வரசு எடுக்கும் முயற்சிகள் மூலம் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

கூட்டு எதிரணினர் வெளி நாடு செல்ல ஆயிரம் முறை நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில் ஞானசார தேரர் எதுவித அனுமதியும் இன்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கூட தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

-அ.அஹமட்-

2 comments:

  1. munnal my 3

    ippo

    GNANE 3

    ReplyDelete
  2. நல்லாட்சியில் முஸ்லிம்களும் அமைச்சர்களாக இருக்கிறார்கள் தானே.
    அரசாங்கம் என்றால் அமைச்சர்களும் சேர்த்துத்தான். ஜனாதிபதியும் PM ம் மட்டும் குற்றம் சொல்ல முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.