Header Ads



இஸ்லாத்தை இழிவுப்படுத்த நினைத்த பெண்ணுக்கு, இழிவை கொடுத்த இறைவன்


ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பவ்லின் ஹான்சன் எனும் பெண் உறுப்பினர் ஹிஜாப் அணிந்த நிலையில் பாராளுமன்றம் வந்தார்.

அவர் பேச துவங்கிய போது ஹிஜாபை கழற்றி வீசியபடி ஆஸ்திரேலியாவில் ஹிஜாபுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறு கூறுவதற்கு அவரை எல்லோரும் பாராட்டுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அவையில் அவருக்கு எதிர்ப்பே கிடைத்தது.

இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் பிராண்டிஸ் பேசும்போது...

ஆஸ்திரேலியாவில் ஹிஜாபுக்கு தடை விதிக்கும் எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை. ஆஸ்திரேலிய முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறி பெண் உறுப்பினரை கண்டித்தார்.

ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் பேர் இஸ்லாத்தை பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய சட்டத்தை மதிக்கும் இந்நாட்டு குடிமக்கள்.

பிற சமூக உடை கலாச்சாரத்தை இழிவாக பேசும் நீங்கள் உங்களை யார் என்று நிரூபித்து விட்டீர்கள் என்று கடுமையான முறையில் கண்டித்தார்.

எல்லோரும் பாராட்டுவார்கள் என்று நினைத்த பெண் உறுப்பினருக்கு இழிவே மிஞ்சியது. இதுதான் இறைவன் ஏற்படுத்திய இழிவு...


No comments

Powered by Blogger.