Header Ads



ரவி தொடர்பான சம்பவம், சிறு துளி - ராஜித

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் மிகப் பெரிய திருடர்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மன்னார், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று -07- நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு எதிராக தொகையாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிதி மோசடி, ஊழல், கொலை என்பவையும் அவற்றில் அடங்கும். அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பான சம்பவம் சிறுத்துளி. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு துபாய் வங்கிகளில் இருக்கும் பணத்தை பற்றியும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வங்கிக் கணக்கில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இருக்கின்றது. செயலாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஆயிரத்து 800 மில்லியன் டொலர்கள் இருக்கின்றது.

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்கில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

மிகப் பெரிய திருடர்களே அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பான சம்பவம் குறித்து பேசுகின்றனர். வெட்கம். நியாயமான தீர்வு எதிர்காலத்தில் கிடைக்கும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. They are professional looters. You have failed to prove all.

    ReplyDelete
  2. That doesn't justify your lootings

    ReplyDelete

Powered by Blogger.