Header Ads



அமெரிக்காவை புரட்டியெடுத்த சூறாவளி, வெள்ளமும் மிரட்டுகிறது


அமெரிக்காவை தாக்கிய ஹார்வி சூறாவளியால் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரான ஹுஸ்டனில் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதோடு பல உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூறாவளியின்போது வீட்டில் தீ ஏற்பட்டதால் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து தனது வாகனத்தில் இருந்து வெளியேற முயன்ற பெண் ஒருவர் மூழ்கி பலியாகியுள்ளார்.

இதுவரை ஐவர் உயிரிழந்திருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் நகரில் இருந்து 2,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை வீட்டு வெளியேறி இருக்கும் நிலையில் வாகனங்களில் இருந்தவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அப்போட் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை வளைகுடா கடலோரப்பகுதியை முதல் முறை தாக்கிய ஹார்வி சூறாவளியால் பில்லியன் டொலர்கள் மதிக்கத்தக்க பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

டெக்சாஸின் ராக்போர்ட் நகர் அருகில் கரையைக் கடந்த ஹார்வி சூறாவளியால் சுமார் 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

ஹுஸ்டன் பெருநகர் பகுதியில் வெள்ளப்பெருக்கால் அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அங்கு பயணம் செய்வது இயலாத ஒன்று எனவும் வானிலை அலுவலகம் கூறியுள்ளது.

புயல் பாதிப்புகளையொட்டி, ஏராளமான தங்குமிடங்களும் ஒருங்கிணைப்பு மையமும் திறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்லி புயலுக்கு பின்னர் வீசும் கடுமையான புயலாக ஹார்வி புயல் கருதப்படுகிறது.

டெக்சாஸில் 1961-ஆம் ஆண்டில் கர்லா சூறாவளி தாக்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர் என்று ஹுஸ்டன் குரோனிக்கல் நாளிதழ் தெரிவித்துள்ளது. 

4 comments:

  1. யா அல்லாஹ் இந்த அழிவை பர்மக்கும் அனுப்பி உன்னுடைய கோவப்பார்வையை கொட்டுவாயாக !

    ReplyDelete
  2. சுப்ப பவராம் சுப்ப பவர் அல்லாஹ்வின் பவருக்கு முன் எல்லாம் ஜூஜிப்பி.

    ReplyDelete
  3. இந்நாட்டில் ஒருவர் இறந்ததற்கே இத்தனை செய்திகளா....??? அப்போ மற்றைய நாடுகளில்...???

    ReplyDelete
  4. Don't be happy.in USA There are many good practicing Muslims and kind hearted non Muslims. Only handfull have hatred on Muslims. Most of them are good people. What can general public do when government fighting with Muslim countries. Minority Muslims are living peacefully in USA.

    ReplyDelete

Powered by Blogger.