Header Ads



மியன்மார் முஸ்லிம்கள் மீதான, தாக்குதலை நிறுத்த வலியுறுத்துங்கள் - SLTJ


மியன்மார் (ரோஹிங்யா) முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் மற்றும் கடும்போக்கு இயக்கங்கள் தொடர்ந்து நடத்திவரும் கொடூர தாக்குதல்களினால் இதுவரை சிறுவர்கள், பெண்கள், முதியோர் என ஆயிரக் கணக்கானோர் கொலை செய்யப்பட்டு, இலட்சக் கணக்கானோர் கடும் காயங்களுக்கு உள்ளாகி, இருப்பிடங்களை இழந்து நாட்டை விட்டே வெளியேறும் அவல நிலை அங்கு உருவாகியுள்ளது.

தொடர் தாக்குதல்களினால் நாட்டை விட்டே வெளியேறும் பலர் கடலில் மூழ்கி மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்ச நிலையை அடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. குறைந்த பட்சம் கண்டனத்தைக் கூட முறைப்படி வெளியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

அத்துடன், சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற மியன்மரின் ஆங்சாங் சூசியின் மேற்பார்வையில் ஆட்சி நடந்து வரும் நிலையில் எந்த நாட்டில் தான் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை? என்று ஆங்சாங் சூசி ஏளனமாக தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குறியதாகும்.

மியன்மார் நாட்டுடன் நெருங்கிய நட்புக் கொண்ட நாடாக இருக்கும் இலங்கை, மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு எதிராக அந்நாட்டு அரசுக்கு அலுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்களும், அமைச்சர்களும் அரசுக்கு அலுத்தம் தெரிவிக்க வேண்டும்.

மனித நேயமற்ற இக்கொடூர தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக உடனடி அலுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்பதை உணர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் உடனடி முயற்சிகளை எடுக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துக் கொள்கிறது.

-இவன், 
A.G ஹிஷாம் MISc,
செயலாளர்,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

No comments

Powered by Blogger.