Header Ads



படு மோசடியாளர்கள், சமய தலைவர்களே - ரஞ்சன் ஆத்திரம்

இலங்கையில் ஆகவும் படுமோசடியாளர்களாக இலங்கை சமய தலைவர்கள் உள்ளனர் என, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று (21) கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் தொரடந்து கருத்துத் தெரிவிக்கையில். 

“பொது சொத்துகளை சூறையாடுபவர்கள் தமக்குள் மோதிக்கொள்ளும்போது மக்கள் நன்மையடைகின்றனர். இவ்வாறான நிலைமைகள் அண்மையில் பல தடவை   ந‌ி‌ரூபிக்கப்பட்டுள்ளன. 

“பேர்பெச்சொவல் ட்ரெஷறீஸ் தலைவர் அர்ஜுன்​​​ அலோஸியஸ் மற்றும் நஹில் விஜய சூரியவின் மகளும் மோதிக்கொண்டமை இதற்கான அண்மைக்கால உதாரணம் ஆகும். இதனால் பிணை ஊழல் பற்றி பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்தன. கருணா மற்றும் பிரபாகரனுக்கு இடையிலான முரண்பாடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கு வழிவகுத்தது. கள்வர்கள் மோதும் போது அரசியல் கட்சிகளும் நன்மையடையும். 

“அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ விடயத்திலும் இதுவே நடந்துள்ளது. இலங்கையில் ஆகவும் படுமோசடியாளர்களாக இலங்கை சமய தலைவர்கள் உள்ளனர். அடுத்ததாக வழக்குரைஞர்கள் உள்ளனர். 

“கொல்வின் ஆர். டீ. சில்வா காலத்திலிருந்து பிரபல வழக்குரைஞர்கள் குற்றமிழைத்தவர்களை பாதுகாத்து வருகின்றனர். கறுப்பு சட்டைக்காரர்கள் மாபெரும் திருடர்கள்” எனவும் அவர் தெரிவித்தார். 

1 comment:

Powered by Blogger.