Header Ads



அர்ஜூனாவுக்கு எதிரான வழக்கை, நீதிமன்றம் தூக்கி வீசியது

முன்னாள் கிரிக்கட் வீரர் மற்றும் தற்போதைய பெற்றோலியவளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க அவர்களுக்கு எதிராக மானநஷ;டஈடு வழக்கொன்றை திலங்க சுமதிபால அவர்கள் நுகேகொட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வழக்கு எண் ஆஃ4452008. இவ்வழக்கை இன்று -24- விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

அமைச்சருக்கு எதிரக திலங்க சுமதிபால அவர்கள் இவ்வழக்கை 2005ஆம் ஆண்டு மார்ச் 03ஆம் திகதி நுகேகொட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியளார்கள் சந்திப்பின்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

'திலங்க சுமதிபால அவர்கள் ஊழல்வாதி, நான் அவ்வாரன நபர்களுடன் சேர்ந்து எமது நாட்டு கிரிக்கட் துறையை அபிவிருத்தி செய்யமுடியாது, திலங்க மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நீருபிக்கப்பட்டுள்ளன, மேலும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன, திலங்க அவர்கள் டெலிக்கொம் நிறுவனத்துக்கு தலைவராக இருக்கமுடியாது' என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களால் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகவே திலங்க சுமதிபால அவர்கள் அமைச்சருக்கு எதிரக 500 மில்லியன் ரூபா நஷ;ட ஈடு வழங்குமாறு கோரியே மானஷ;டஈடு வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

அமைச்சர் தெரிவித்தமையானது ' திலங்க சுமதிபால அவர்கள் சுயஉந டீழழமiபெ தொடர்பான வியாபாரத்தில் தொடர்பு கொண்டுள்ளவார், போயதினத்தன்று பிணையில் சென்றவர், சர்வதேச கிரிக்கட்டில் போட்டி நிர்ணயம் செய்யும் வியாபாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் அதனை சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் விசாரணை செய்து வருகின்றது எனவும்' தெரிவித்திருந்தார். 

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கொண்ட திலங்க சுமதிபால அவர்கள் அமைச்ச தெரிவித்த விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தார். எனினும் இது தெடர்பான வழக்கினை விசாரனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இன்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களுக்கு சார்பாக தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களுக்கு சார்பாக மூத்த வழக்கறிஞர் அதுலபண்டார ஏரத் மற்றும் சஸிகா டீ சில்வா பங்குபற்றினர். திலங்க சுமதிபால வெர்களுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரபன மற்றும் நவீன் மாரபன அவர்கள் வாதாடினர். 

No comments

Powered by Blogger.