Header Ads



பிறந்த குழந்தைக்கு ஜேர்மனி அதிபரின், பெயரைசூட்டிய சிரிய அகதித் தம்பதி


ஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர்.

சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.

இத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு நன்றி செலுத்தும் வகையில் அக்குழந்தைக்கு Angela Merkel Muhammed எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இத்தகவலை மருத்துவமனை நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ளனர், புகலிடம் கோரி வந்த இரண்டு பெற்றோர்கள் ஏற்கனவே தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டியுள்ளனர்.

ஜேர்மனியில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் அகதிகளுக்கு தாராளமாக புகலிடம் வழங்கி வரும் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு கூடுதலாக 15 புள்ளிகள் ஆதரவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. அழகிய குழந்தையைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்க மறந்து நபிகளாரின் சுன்னத்திற்கு முரணாக அழகிய பெயரைகளை விட்டுவிட்டு இப்படி ஒரு பெயர் தேவையா ?????

    ReplyDelete
    Replies
    1. Boss அல்லாஹ் தான் அவர்களை அங்கு அனுப்பி வைத்து தான் நாடியவாரு பாதுகாத்தான், ஆனால் அந்த தருணத்தில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் கடினம். உதவியவருக்கு நன்றிக் கடன் வைப்பதில் தவறேது.....????

      Delete
  2. These are personal affairs, may be wrong, doubtful or wrong, but let us not make a BIG ISSUE, and make the life of Refugees miserable.

    ReplyDelete
  3. எப்படியான பெயர்களை வைக்க வேண்டும் என மார்க்கம் வழிகாட்டியுள்ளது. அதனை இவர் மீறிவிட்டார். நீங்கள் யாரும் அப்படிச் செய்ய வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.