Header Ads



துருக்கியில் மிகப்பெரிய வழக்கு


துருக்கியில் 2016இல் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புபட்ட சுமார் 500 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் மிகப்பெரிய வழக்கு விசாரணை ஒன்று நேற்று இடம்பெற்றது.

வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்திருக்கும் சந்தேக நபர்கள் மீது சதிகாரர்களின் மையமாக இருந்த விமானத்தளம் ஒன்றில் இருந்து அரசை கவிழ்க்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு மொத்தம் 486 சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதால் தலைநகர் அங்காராவுக்கு வெளியில் அதற்கு வசதியான நீதிமன்றம் கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் கொலை, அரசியலமைப்பை மீறியது மற்றும் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை கொலை செய்ய முயன்றது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

துருக்கி நிர்வாகத்தால் சதிகாரர்களின் தலைமையகம் என்று வர்ணிக்கப்பட்ட தலைநகரின் வடமேற்கில் உள்ள அகின்சி விமானத்தளத்தில் இருந்து இராணுவ சதிப்புரட்சிக்கு முயற்சித்ததாகவே இவர்கள் மீதான குற்றச்சாட்டு உள்ளது.

எப்–16 போர் விமானங்கள் கொண்டு தலைநகரை வட்டமிடும்படியும் தாக்குதல்களை நடத்தும்படியும் இந்த விமானத்தளத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எப்–16 போர் விமானங்கள் மூலம் துருக்கி பாராளுமன்றத்தின் மீது மூன்று தடவை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

No comments

Powered by Blogger.