Header Ads



அந்த வடுக்கள், ஈரம் காயாமல் இருக்கிறது - அசாத் சாலி

முஸ்லிம்களின் தனித்துவப் போராட்டம் இலங்கையில் என்றென்றும் தொடர்ந்து கொண்டிருக்கப் போகிறது. எந்த அரசு வந்தாலும் ஆட்சியை நிறுவுவதில் எத்தனை தூரம் பங்களிக்கிறோமோ அதேபோன்று ஆட்சி பீடம் ஏறியதும் எமக்கெதிராக வரும் சூழ்நிலைகளையும் எதிர்த்துப் போராட விளைகிறோம்.

ஆட்சி, ஆயுத அதிகாரத்தை வைத்திருந்த கொடிய விடுதலைப்புலிகளின் இரத்த வெறிக்கு காத்தான் குடியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 பலியாகி ஷஹீதான 27வது வருடத்தை அடைந்திருக்கும் நிலையில் இன்று அந்த வடுக்கள் ஈரம் காயாமல் இருக்கிறது. 

அதன் பின் ஏறாவூரில் புலிகளின் இரத்தவெறிக்குப் பலியானவர்கள் முதல், யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள், அண்மையில் அளுத்கமயில் பேரினவாத இனவாதத்துக்குப் பலியானவர்கள் வரை தியாகங்கள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இதன் துவக்கப்புள்ளியைக் கோடிட்டுக் காட்ட முடியுமாக இருந்தாலும் கூட முடிவுப் புள்ளியை வரையறுக்க முடியாத காலத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்நாளில் சுஹதாக்களை நினைவு கூர்வதோடு எதிர்காலத்தில் எமது சுய கௌரவத்தையும் தனித்துவத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலான திட்டமிடலும் அதற்கேற்ற அரசியல் நடவடிக்கைகளும் அவசியப்படுகிறது.

சமூகத்துக்காக வித்தானவர்களின் ஈடேற்றத்திற்காக பிரார்த்தித்துக்கொள்வோம்.

அசாத் சாலி
தலைவர்,
தேசிய ஐக்கிய முன்னணி
03-08-2017

No comments

Powered by Blogger.