Header Ads



கிழக்கு மாகாண சபையை, தமிழர்கள் கைப்பற்ற வேண்டும் - கருணா

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் அரசியலில் விழிப்படைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கல்லடியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 "தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணிக்கு சிங்கள மக்களினதும், சிங்கள மதத் தலைவர்களினதும் ஆதரவு வெளிப்படையாகவே இருக்கின்றது.

இந்நிலையில், நல்ல ஒரு தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள மக்களும், சிங்கள மதத் தலைவர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறான நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களினது பிரதிநிதித்துவம் முழுமையானதாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இவர் ஒரு கொலையாளி, இவருக்கு பேசுச் சுதந்திரம் கொடுத்ததே தப்பு, அப்போதே தூக்குமேடை ஏற்றியிருக்க வேண்டும், மாறாக பொன்னாடை போர்தி அழகுபார்த்தார்கள்.

    சில வேளை பொன்னாடை போர்தியவர்களது நாடகமாகக்கூட இருக்கலாம்.

    ReplyDelete
  2. கிழக்கில் இடம்பெற்ற கருணா தலைமையிலான முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து படுகொலைகள் பற்றியும் தனியாக ஆணைக்குழு ஒன்றினை நிறுவி விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்

    ReplyDelete
  3. தமிழினத்தையே காட்டிக்கொடுத்த இந்த மகானின் கதை ஆடு நனையுதே என்று ஒநாய் அழுத கதை மாதிரி இருக்கிறது

    ReplyDelete
  4. மக்களுக்கு தன்னை ஞாபகப்படுத்த எதயாவது உளறுதல்

    ReplyDelete

Powered by Blogger.