Header Ads



A/L பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியாகவில்லை - பரீட்சைத் திணைக்களம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த உயர்தர விஞ்ஞானப் பரீட்சைக்கான வினாத்தாள் முற்கூட்டியே வெளியான சம்பவத்தில் மாணவர்களை ஏமாற்றும் வகையிலான மோசடி நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையில் கம்பஹா பொலிசார் துரித விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வகுப்பு ஆசிரியர் பரீட்சை மண்டபத்தில் இருந்த சிலரின் உதவியுடன் அன்று காலை நடைபெற்ற இரசாயன விஞ்ஞானப் பாடத்தின் வினாத்தாளை மதிய இடைவேளையின் போது பெற்றுக் கொண்டுள்ளார்.

அதனைக் கொண்டு மாலையில் அடுத்த பகுதிக்கான பரீட்சை நடைபெறுவதற்கிடையில் போலியான உத்தேச வினாத்தாள் ஒன்றை தயாரித்து பரீட்சை முடிந்து வந்த மாணவர்களிடம் விநியோகித்துள்ளார்.

மாணவர்களை ஏமாற்றி தனது தனியார் வகுப்புக்கு கூடுதல் மாணவர்களை வரவழைத்துக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

மற்றபடி பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாகவோ அதன் மூலம் பரீட்சையின் நம்பகத் தன்மைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவோ இல்லை என்று பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.