Header Ads



ஹலீமின் முயற்சி வெற்றி, இலங்கைக்கு 600 ஹஜ் கோட்டா, மேலதிகமாக கிடைத்தது

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம், சவூதி அரேபியாவிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய, இலங்கைக்கு மேலதிகமாக 600 ஹஜ் கோட்டாக்கள் இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளன.

முஸ்லிம் சமய விவகார அமைச்சிடமிருந்து ஜப்னா முஸ்லிம் இணையம் இந்தத் தகவலை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு உறுதிப்படுத்திக் கொண்டது.

அந்தவகையில் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் 21 ஆம் திகதி திங்கட்கிழமை அங்கீகரிக்கப்பட்ட ஹஸ் முகவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் குறித்த கோட்டாக்கள் ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் மற்றும் இலங்கைக்கான ஹஜ் குழு ஆகியன மேற்கொண்ட முயற்சியின் காரணமாகஇந்த மேலதிக 600 கோட்டாக்களi சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்க முன்வந்ததாக அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளர் பாஹிம் கூறினார்.

No comments

Powered by Blogger.