Header Ads



முஸ்லிம்களில் 43 வீதமும், சிங்களவர்கள் 23 வீதமும், தமிழர்கள் 20 வீதமும் நோயினால் பாதிப்பு

இர­சா­யன சுவை­யூட்­டப்­பட்ட  உணவுப் பாவனை இலங்­கையில் அதி­க­ரித்து வரு­கின்­றது. இதனால் தொற்றா நோய்­களின் அதிக தாக்­கத்­துக்கு எமது நாடு முகம்­கொ­டுத்து வரு­கின்­ற­தென சட்ட வைத்­திய நிபுணர் கே.எஸ்.தஹநா­யக தெரி­வித்தார். 

Drஆரோக்­கி­ய­மான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப நிரந்­த­ர­மான தீர்வு எனும் தொனிப்­பொ­ருளில் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லக கள உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் விவ­சா­ய, சுகா­தார துறை அதி­கா­ரி­க­ளுக்கு 'ஹெல­சு­வய' அமைப்­பினால்  அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்தில் நடத்­தப்­பட்ட விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கில் இவ்­வாறு கூறினார்.

இந்­நி­கழ்வின் பிர­தான வள­வா­ள­ராகக் கலந்து கொண்ட சட்ட வைத்­திய நிபுணர் தஹ­த­நா­யக அங்கு தொடர் ந்து விளக்­க­ம­ளிக்­கயில்,  

கொழும்பு பிர­தே­சத்தில் 59 வீத­மான நீரி­ழிவு நோயா­ளர்கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­திய ஆய்­வுகள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. மேலும் 40 வீத­மான மக்கள் ஈரலில் கொழுப்பு படி­வினால் ஈரல்­நோ­யா­ளர்­க­ளா­கவும் உள்­ள­தாக இத்­தகவல் தெரி­விக்­கின்­றது.

 இதே­வேளை 15 வீத­மான குழந்­தை­க­ளுக்கு ஈரல் நோய் காணப்­ப­டு­கின்­றது. இந்­நோ­யா­னது சிரோசிஸ், புற்­றுநோய், நீரி­ழிவு, இரு­தய நோய் போன்ற உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்தக் கூடிய நோய்­க­ளுக்கு வாய்ப்பை வழங்­கு­கின்­றது.

 எமது முன்­னோர்கள் விவ­சா­யத்­திற்கு எந்­த­வி­த­மான இர­சா­யன பயன்­பா­டு­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. அக்­கா­லத்தில் வாழ்ந்த பராக்­கி­ரம மன்னன் இர­சா­யன பயன்­பா­டின்றி மேற்­கொண்ட விவ­சா­யத்தின் மூலம் 6 கோடி மக்­க­ளுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்­தது மட்­டு­மல்­லாமல் வெளி­நா­டு­க­ளுக்கும் ஏற்­று­மதி செய்­தி­ருந்தார்.

வைத்­திய ஆய்­வு­க­ளின்­படி இலங்­கையில் முஸ்­லிம்­களே அதி­க­மான நோய்­க­ளுக்கு உட்­ப­டு­கின்­றார்கள் என் றும், இது 43 சத­வீ­த­மாகக் காணப்­ப­டு­வ­துடன், சிங்­க­ள­வர்­களில்    23 சத­வீ­தமும்,  தமி­ழர்கள் 20 வீதமும் நோயினால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர் என்றார்.

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா)

2 comments:

  1. திண்டு கெட்டவன்.

    ReplyDelete
  2. Let them eat more briyani and meats.we should cut meat and we should cut oil and sugar..it is our food habits that make them more unhealthy

    ReplyDelete

Powered by Blogger.