Header Ads



வேடிக்கை பார்த்தவர்களை தாக்கிய யானை - ஒருவர் பலி, 3 பேர் காயம்

வட­ம­ராட்சி கிழக்கு, மரு­தங்­கேணிச் சந்­தியில் நேற்றுக் காலை 9 மணி­ய­ளவில் யானை தாக்கி குடும்­பஸ்தர் ஒருவர் மர­ண­ம­டைந்தார். மூவர்  காய­ம­டைந்­தனர்.

இப்­பி­ர­தேசத்­துக்குள் திடீ­ரென நுழைந்த காட்டு யானையை வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­தோரே அதன் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கினர். 

இச் சம்­ப­வத்தில் 54 வய­தான ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் இருவர் பலத்த காயங்­க­ளுடன் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்ப்­பட்­டுள்­ளனர். மற்­றை­யவர் சிறு காயங்­க­ளுடன் பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் சிகி­சசை பெற்றார்.

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை வட­ம­ராட்சிப் பிர­தே­சத்­துக்குள் முல்­லை­தீவுப் பகு­தி­யி­லி­ருந்து யானைகள் வந்து நட­மா­டு­வ­தாக கிரா­ம­வா­சிகள் பேசிக் கொண்­டனர்

இந்­நி­லையில் அதே தினம் ஞாயிற இரவு 9 மணி­ய­ளவில் ஆழி­யலை கடற்­ப­கு­தியில் யானை ஒன்று நட­மா­டு­வதைக் கண்ட மீன் வாடி­களில் தங்­கி­யி­ருந்து மீன­வர்கள் கிரா­ம­வா­சி­க­ளுக்குத் தெரி­வித்­துள்­ளனர். உடன் அங்கு திரண்ட கிரா­ம­வா­சிகள் நெருப்புக் கொளுத்தி வெடி கொழுத்­தி, மோட்டார் சைக்­கிளில் ஒளி­பாய்ச்சி ஆழி­ய­வளை மயா­னத்­துக்கு அப்பால் விரட்­டி­யி­ருந்­தனர்.  

இந்­நி­லையில் நேற்று (திங்கள்) காலை வத்­தி­ராயன் ஊடாக மரு­தங்­கேணிச் சந்தியை நோக்கி வந்த யானையை வேடிக்கை பார்க்க பலர் குழுமியபோது யானை தாக்குதலை மேற்கொண்டபோதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.