Header Ads



புத்தளம் தள வைத்தியசாலைக்கு, நாற்காலிகள் அன்பளிப்பு


Puttalam YMMA வின் வேண்டுகோளின் பேரில் Colombo YWMA மகளிர் அணியினர் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சக்கர நாற்காலிகள்  (Wheel Chairs) 4 ஐ பதில் மருத்துவ அத்தியட்சர் Dr. நகுலநாதன், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஷபீக் ஆகியோரிடம் அன்பளிப்பு செய்தனர்.

இதில் YMMA வின் அழைப்பினை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் நவவி கலந்து சிறப்பித்தார். YWMA தலைவி பயாஸா, Puttalam YMMA தலைவர் முஹ்ஸி, செயலாளர் முஜாஹித் நிசார், உதவித் தலைவர் ஹிஜாஸ், பணிப்பாளர் நபீல் உட்பட உறுப்பினர்களான அல்பர் மற்றும்  இதாப் , லயன்ஸ் கழக உறுப்பினர்கள்  சிலரும் கலந்து கொண்டனர்.

-  YMMA ஊடகப்பிரிவு -

No comments

Powered by Blogger.