Header Ads



மைத்திரியின் ஆசனம், ஆட்டம் கண்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமர்ந்திருந்த ஆசனம் ஆட்டம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் போது ஜனாதிபதி மைத்திரி அமர்ந்திருந்த ஆசனம் திடீரென அதிரத் தொடங்கியுள்ளது.

ஆசனம் அதிர்வதாக ஜனாதிபதி ஏனைய அமைச்சர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளையும் பணித்துள்ளார்.

பழைய நாடாளுமன்றிற்கு எதிரில் நிதி நகரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கடற்பகுதியில் மேற்கொண்ட துளையிடும் நடவடிக்கையினால் இவ்வாறு அதிர்வு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

வேறும் ஓர் முறையைப் பயன்படுத்தி துளையிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சீன நிறுவனத்திற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

1 comment:

  1. There was/is no drilling works on going
    Whole port city project.
    Vibrations were caused due the dynamic compaction activities (which in other words means dropping a 20ton weight to the ground to compact the reclaimed land on sea) , all further works ground improvement works of dynamic compaction are stopped until cabinet approval.

    ReplyDelete

Powered by Blogger.