Header Ads



பலதாரமணமும், பெண்ணுரிமையும்..!!

−சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்−

இஸ்லாமிய விவாக சட்ட ஆலோசனை பெற வருபவர்கள் மிகவும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு விடயம் இரண்டாவது திருமணம் பற்றியதாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கு மேற்பட்ட  திருமணங்களை முடிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும்.இது ஆகக் கூடியது ஒரே தடவையில் நான்கு என்ற வரையறைக்கு உட்பட்டது.

இலங்கையில் திருமணம் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சட்டமே அமுல்படுத்தப்படுவதால் இலங்கை முஸ்லிம்களுக்கு பலதார மணத்துக்கு எந்தத்தடையும் இல்லை.ஆனால் பலருக்கும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் ஒரு விடயம் இரண்டாவது  திருமணத்துக்கு முதல் மனைவியின் அனுமதியைப்பெற வேண்டுமா என்பதாகும்.அவ்வாறான அனுமதி அவசியமில்லை.என்றாலும் இஸ்லாம் பல நிபந்தனைகளை பலதாரமணத்துக்கு விதித்துள்ளது.அதில் முக்கியமானது மனைவிமார்களிடம் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.அவர்களை சகல விடயங்களிலும் சமமாக எந்தவித பாரபட்சமுமின்றி பார்க்க வேண்டும் .அவ்வாறு நடந்து கொள்ள முடியாமற் போகும் என அஞ்சினால் ஒருத்தரைத்தான் முடிக்க வேண்டும் என்பது அல்குர்ஆனில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இன்று எம்மத்தியில் நிகழும் பலதார மணங்கள் பலவும் குறுகிய நோக்கங்களைக் கொண்டதாகவே உள்ளன.பலதாரமண அனுமதியை தங்களக்கு சாதகமாகப் பயன்படுத்தி அடுத்த திருமணத்துக்கான கதவைத் திறக்கும் ஆண்களே அதிகம். பல பெண்கள் கனவனின் இரண்டாவது திருமணத்துக்குப் பின்னர் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு நியாயம் கேட்க எங்கு செல்வது என்று அறியாது மௌனமாக உள்ளனர்.இதன் காரணமாக
பல பெணகளை எந்த வித கவனிப்புக்கும் உட்படுத்தாமல் கைவிட்டு விட்டு இரண்டாவது தாரத்துடன் இல்லற வாழ்க்கை நடத்தும் ஆண்கள் பலர் உள்ளனர்.இஸ்லாம் அவ்வாறு ஒருசாராருக்கு மட்டும் சார்பான சட்டங்களைக் கொண்ட மார்க்கமல்ல. அவ்வாறு இருக்கவும் முடியாது.
திருமணச் சட்டம் முழுமையாக இஸ்லாமிய சட்டமாகவே இலங்கை முஸ்லிம்களுக்கு அமுல்படுத்தப்படுவதால், இரண்டாவது திருமணத்தின் காரணமாக தன்னை பாரபட்சமாக கணவன் நடத்துவதை ஒரு பெண்ணால் நிரூபிக்க முடியுமெனின் இரண்டாவது திருமணம் செல்லுபடியற்றதாக வேண்டும் என்பதே நியாயம்.அதற்கான சட்ட அனுமதியும் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தில் இருத்தல் வேண்டும்.அவ்வாறான விண்ணப்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுத் தீர்ப்புக்கள் இலங்கை முஸ்லிம் விவாக ,விவாகரத்துச் சட்ட  வரலாற்றில் நான் அறிந்த வரை வழங்கப்படவில்லை.அதே போல் இரண்டாவது திருமணத்தின் காரணமாக தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி இரண்டாவது திருமணத்தை செல்லுபடியாக்கக் கோரி வழக்கு தொடர்நதவர்களும் இல்லை என்றே கூற வேண்டும்.அதுமட்டுமல்ல அவ்வாறான விண்ணப்பங்களை காதி நீதவான்கள் ஏற்று தீர்ப்பு வழங்குவார்களா என்பதும்.கேள்விக்குறியான விடயம்.
ஆனால் இஸ்லாமிய சட்டக்கலையில் தேர்ச்சி பெற்ற பலர் இன்று காதி நீதவான்களாக உள்ளனர்.அவர்களில் ஒருவர் அவ்வாறான தீர்ப்பு ஒன்றை ஆதாரங்களுடன் வழங்கினால் அது மார்க்க வரையறைக்கு அப்பால் சென்று இன்னுமொரு திருமணம் முடித்துக்கொண்டு முதல் மனைவிக்கு அநீதியும்,பாரபட்சமும் காட்டுபவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிப்பதோடு மட்டும் நின்று விடாமல் சமூகத்தில் விழிப்புணர்வுக்கும் வழிகோலலாம்.காதி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து பின்னர் காதி நீதவான்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுமிடத்து மேன்முறையீடு செய்வதன் மூலமாகவோ அல்லது மாவட்ட நீதிமன்றத்தை நாடுவதன் மூலமோ நிவாரணத்தை பெற்றுக்  கொள்ள முயற்சிக்கலாம்.
முஸ்லிம் விவாக,விவாக ரத்துச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று இன்று பரவலாகப் பேசப்படுகின்ற வேளை இவ்வாறான விடயங்களிலும் எமது கண்ணோட்டத்தை செலுத்த வேண்டும். கணவனின் பலதார மணத்தினால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் தைரியமாக முன்வந்து  நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும்.பெண் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் இவ்விடயத்திலும் கூடிய கரிசணைகளை எடுத்தல் வேண்டும்.

3 comments:

  1. இப்படி செய்தால் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் விரும்பிய பெண்ணை மணந்துகொள்ளும் நிலைமைகள் அதிகரித்து சமூகத்தில் விவாகரத்து பெற்ற பெண்கள் அதிகரிக்கவே வழி ஏற்படுமே ஒழிய இது தீர்வை தரப்போவதில்லை. இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் முதல் அரச தொழிலில் ஈடுபடுபவர்கள்வரை முக்கால்வாசிப்பேர் பெண்கள். பெண்களும் உழைக்கும் காலம் இது? கணவனது உழைப்பில் மட்டும் தங்கி வாழும் பெண்கள் அரிதாகி வரும் காலமிது? இங்கே காலத்திற்கு தகுந்தால்போல் உரிய தீர்வுகளை வழங்குவதே சிறப்பாகும். ஒரு பெண் தனக்கு போதுமான அளவு உழைப்பு வருவாயுடன் இருக்கையில் அவளுக்கு விவாகரத்தின் பெயரால் அல்லது இரண்டாம் திருமணத்தின் பெயரால் கணவனே சகல செலவுகளையும் பொறுப்பேற்றிட வேண்டும் என்பது சமகால பொருளாதார நிலைமைக்கு பொருத்தமான தீர்வுதானா?

    ReplyDelete
  2. Replies
    1. First of all study about pornography in bible, child abuse & girl raped cases by your holy fathers. Jesus never claimed Christianity, you're in the path of Satan

      Delete

Powered by Blogger.