Header Ads



வித்தியா கொலை - சுவிஸ் குமாருக்கு உதவிய, பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜன் தலைமறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பொலிஸார் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜனை கைது செய்வதற்க நடவடிக்கை எடுத்த போது, அவர் தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

எனவே, பொலிஸார் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறும் ஊர்காவற்றுறை நீதிவானிடம் புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதவான், ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீகஜன் அண்மையில் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.