Header Ads



நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவியிலிருப்பதற்குத் தகுதியற்றவர் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது

பனாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்,  பிரதமர் பதவியிலிருப்பதற்குத் தகுதியற்றவர் என, அந்நாட்டின் உச்சநீதிமன்றம், இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யுமாறும், உரிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருகின்றமை தொடர்பான இரகசிய ஆவணங்களை,  பனாமாவில் உள்ள புகழ்பெற்ற,'மோசக் பொன்செகா' என்ற சட்ட நிறுவனம், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவருயை மகன்மாரின் பெயரும் இடம்பெற்றிருந்தைத் தொடர்ந்து, அவர்கள் மீது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விசாரணையின்போது கடந்த மே மாதம் ‘கூட்டு விசாரணைக் குழு’ ஒன்று நீதிமன்றத்தால் விசாரணைக்காக உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டு விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Very courageous decision taken by the Pakistani PM. Will Sri Lankan politicians follow his foot path?

    ReplyDelete

Powered by Blogger.