July 27, 2017

பஷிலின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, போராட்டத்தில் குதித்தனர் - ராஜித

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்...

? எரிபொருள் விநியோகம் சீர்குலைந்துவிட்டதே?  ? அவர்களின் கோரிக்கைகள்தான் என்ன? 

ராஜித: தொழிற்சங்க கோரிக்கையாயின் பேசித் தீர்மானிக்கலாம். அது அரசியல் கோரிக்கை, ஆகையால், அவர்களிடமே கேளுங்கள். 

? நிறுத்தமாட்டோம் என்கின்றனர். 

ராஜித: வீட்டுக்குத்தான் போகவேண்டும். அத்தியாவசிய சேவைகள் சட்டம், அவர்களுக்கு தெரியாதுபோலும். பஷில் ராஜபக்ஷவின் வீட்டில் இரவில் சாப்பிட்டுவிட்டு, காலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தால், அடிபணிய மாட்டோம். 

? டெங்கு நிலைமை, இலங்கையில் மோசமாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதே?  ? ஊசியைப் பெற்றுக்கொடுக்கலாமே 

ராஜித: பிரான்ஸ் கண்டுபிடித்த அந்த ஊசிமருந்தை பிலிப்பைன்ஸ் பயன்படுத்துகின்றது. சிங்கப்பூரும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஊசியை பெற்றுக்கொடுக்கலாம். அதனால், டெங்குக் காய்ச்சல் பீடிக்காது என்பதை ஒளடத அதிகார சபைதான் தீர்மானிக்கவேண்டும். 

? வைத்தியர்களும் வேலைநிறுத்தம் செய்கின்றனரே? 

ராஜித: வெற்றியளிக்கவில்லை. வெளிநோயாளர் பிரிவை மட்டுமே பார்க்கக்கூடாது. ஏனைய பிரிவுகளின் சேவைகள் எவ்விதமான பாதிப்புகளுமின்றி முன்னெடுக்கப்பட்டன.  

? யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், குறி வைக்கப்படவில்லையென கூறியிருந்தீர்களே? 

ராஜித: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவை இடைமறித்த இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன, இளஞ்செழியன்தான் குறி வைக்கப்பட்டார் என்று கூற முடியாது. யாழ். அரசியல்வாதிகளுடன் அலைபேசியில் உரையாடினேன். துப்பாக்கிதாரி, நீதிபதியையும் பொலிஸாரையும் நன்கு அடையாளம் கண்டுள்ளார். பிறிதொரு கைகலப்பை விலக்குவதற்காக பொலிஸார் சென்றபோதே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பொலிஸார் பயன்படுத்தும் கைத்துப்பாக்கியாலேயே சுடப்பட்டுள்ளது. துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாதவர், பயன்படுத்தியிருந்தால், 15 ரவைகளும் ஒரே தடவையில் வெடித்திருக்கும். 

? துப்பாக்கிப் பயிற்சி எடுத்துள்ளீர்களா? 

ராஜித: கொள்கையடிப்படையில், துப்பாக்கியை நான் ஏந்தமாட்டேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கினேன். ஜனநாயகத்தை நான் நம்புகின்றேன்.  

? வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, நீங்களும் இவ்வாறான முடிவை எடுக்கலாமே? 

ராஜித: நான், ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை. ஓர் அமைச்சர். அத்துடன், அரசாங்கமும் என்னுடையதல்ல. 

? எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவெடுக்க ஜனாதிபதியே இறுதியில் தலையிடுகிறார். அமைச்சர்களுக்கு ஏன் முடியாதா? 

ராஜித: பல பிரச்சினைகளுக்கு, அரச தலைவர்களே இறுதியில் தீர்வு கண்டனர். அதற்கான வரலாறுகளும் உள்ளன. தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவதற்கு விரும்புகின்றனர்.  

? அரசாங்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டங்கள் குறித்து 

ராஜித: ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தால், அரசாங்கத்தை பாதுகாக்க நான், நடவடிக்கை எடுப்பேன் என்றார். 

0 கருத்துரைகள்:

Post a Comment