Header Ads



தமிழ் சமூகத்திற்கு, புலம்‌பெயர்ந்து வாழும்‌ யாழ்ப்பாண முஸ்லிம்களின் வேண்டுகோள்..!

வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2002 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.

அதன் பின்னால் உள்ள உள் நோக்கம்தான் என்ன,

யுத்த காலத்திலே இலங்கை அரசாங்கமும்,உதவி செய்வதாக கூறிக்கொண்டு வந்த நாடுகளும்,அந்நிய அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழ் முஸ்லிம் நல்லுறவில் திட்டமிட்டு ஏற்படுத்திய ஆறாத வழுக்கள் யாவரும் அறிந்த உண்மையாகும்.

தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல்களுக்கும், யார் முதலில் தாக்குதல் செய்தார் என்ற விசாரனைகளும் இன்று தேவையற்றதாகும்,சகல கசப்பான அனுபவங்களும் மன்னிக்கப்பட்டு,நல்லுறவிற்கான புதிய அத்தியாயங்கள் இந்த இரு சமூகங்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும்.

தாயக மண்ணின் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட நிலையில் கடந்த இருபத்தாறு வருடங்களாக வடபுல முஸ்லிம் சமூகம் பல சொல்லொனா துயரங்களோடும்,அன்று அகதி என்றும் இன்று வந்தான் வரத்தான் என்றும் வடபுல மண்ணிற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அன்று விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட சகல வடபுல முஸ்லிம் மக்களும்,அவர்தம் சந்ததியினரும் வடபுலத்திற்கே உரித்தானவர்கள்,வடபுல மண்ணில் எந்த நிபந்தனைகளும் அற்ற முறையில் மீள்குடியேற முழு உரிமையும் உடையவர்கள். இது எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

1990 அன்று வெளியேற்றப்பட்ட‌போது ஆயிரம் குடும்பமாக இருந்தவர்கள் இன்று மூவாயிரம் குடும்பங்களாக அதிகரித்திருப்பார்கள்.

வடபுல முஸ்லிம்கள் அன்று வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் அவர்களது சாதாரண இயற்கை சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு நிலப்பகிர்வு கிடை த்திருக்கும், எனவே இந்த உண்மை நிலை உணரப்பட்டு, மீள்குடியேற வருகின்ற முஸ்லிகள் வடபுல மண்ணில் வாழ வழி கொடுக்கப்பட வேண்டும்.

வடபுல மண்ணிற்கே உரித்தான மக்கள் மீள்குடியேற வரும்போது நில ஆக்கிரமிப்பு என்றும்,அந்நியர் என்றும் எதிர்ப்பதும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் சிறப்பான செயற்பாடுகள் அல்ல என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடகிழக்கு முஸ்லிகளை தமது கட்டுப்பாட்டு க்குள் வைத்துக் கொள்ள தமிழ் தரப்பினர் எதிர்பார்ப்பதானது தொடர்ந்தும் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கவும்,சமஸ்டி கோரிக்கை,காணி அதிகாரம்,பொலிஸ் அதிகாரம் என்பவற்றிற்கு எதிராக செயற்படவுமே இட்டுச் செல்லும்.

எனவே தமிழ் சமூகத்தினது டயஸ்போராக்களோடும்,இலங்கையில் இருக்கும் உரிய தமிழ் தரப்பினரோடும் நாம் விரிவான,மனம் திறந்த கலந்துரையாடல்களை தொடர தயாராக உள்ளோம்.
இரு சமூகத்தினதும் சிவில் சமூகப்பிரதிநிதி களோடு அரசியல் பிரதிநிதிகளும்,அதிகாரிகளும் மேற்கொள்ளக்கூடிய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளே வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நடைமுறை சாத்தியமுடைய திட்டங்களை உருவாக்கவும்,தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் களைக்கப்படவும்,வடகிழக்கு‌ மண்ணுக்கும்,மக்களுக்கும் தேவையான உண்மையான் அதிகார பாகிர்வை பெற்றுக் கொள்ள அதற்காக இரு இனமும் ஒன்றாக குரல் கொடுக்க வழி வகுக்கும்.

இந்த நிலைப்பாட்டிலே நின்று நாம் சகல தமிழ் தரப்பினரையும் நம்பிக்கையுடன் கூடிய,மனம் திறந்த பேச்சு வார்த்தைக்கு நேசக்கரம் நீட்டுகின்றோம்.

2 comments:

  1. நீங்கள் உங்களுடைய தேவைகளுக்காக மட்டுமே இவ்வாறு சும்மா பொய் statements விடுவீர்கள்.

    தமிழர்-முஸ்லிம் ஒற்றுமையில் உங்களுக்கு அக்கரை இருந்தால்
    (1) ஏன் தமிழர் ஆதரவு ஜெனிவா தீர்மாணங்களை எதிர்த்து ஊர்வலங்கள் நடாத்தீனீர்கள்?, (2) உங்கள் தலைவர்கள் (ரிசாத் உட்பட) முஸ்லிம் நாடுகளுக்கு சென்று மகிந்த விற்கு ஆதரவு திரட்டினீர்கள்?, (3) ஏன் வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கிறீர்கள்?

    ReplyDelete
  2. அஜன்அந்தோனிராஜ் இங்கு யாரும் யாரையும் மூடி மரைக்கவும் இல்லை யாரையும் யாரும்
    காட்டிக் கொடுக்கவும்மில்லை 90 ம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் இன
    சுத்திகரிக்ப்பு செய்யப்பட்டப்போது நீங்கள் எங்க இருந்திர்கள்?
    தமிழ் மக்களிட்கான ஜெனிவா தீர்மானத்தை யார் தடுத்தது வடமாகாண முஸ்லிம்கள் தடுத்தார்களா? ஆனால் விடுதலைப்புலிகளை எப்பவும் எதிர்ப்பார்கள் வட கிழக்கு இனைப்பைபற்றி கதைக்கின்றீர் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிரகு வடகிழக்கு இனைந்திருந்தபோது என்ன நடந்தது முஸ்லிம்களின் நிலைப்பாடுதான் என்ன? 90 ல்
    விடுதலைப்புலிகள் செய்த வரலாற்றுத்தவருக்கு பிரகும் அதை விரும்புவார்களா?
    கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வடகிழக்கு இணைவதற்கு தமிழ் முஸ்லிம்கள்
    இருவரும் விரும்பமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.