Header Ads



கிழக்கில் ஷரீஆ தீவி­ர­வாத கல்­வி, இலங்கை வானொலியை வஹாபிகள் ஆக்கிரமிப்பு



ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள  பொது­ப­ல­சே­னாவின்  உத்­தி­யோ­க­பூர்வ  காரி­யா­ல­யத்தில்  நடை­பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  உரை­யாற்­றிய அவ்­வ­மைப்பின்  நிறை­வேற்றுப்  பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே  கூறியவை,

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­பட்ட சில விட­யங்­க­ளுக்கும் நாம்  அர­சாங்­கத்­திடம் விளக்கம் கோரு­கிறோம். 

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வில்­பத்து தேசிய வனத்தை அழித்து மக்­களைக் குடி­யேற்­று­வ­தற்கு  முன்னாள் ஜனா­தி­ப­தியின் காலத்தில் இட­ம­ளிக்­கப்­பட்­டது. இந்த அர­சாங்­கத்தின் காலத்­திலும்  இந்த அழி­வுகள்  மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள  நட­வ­டிக்கை என்ன?

கிழக்கில் ஷரீஆ தீவி­ர­வாத  கல்­வியைப் போதிப்­ப­தற்­காக ஓர் இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழகம் நிறு­வப்­பட்டு  வரு­கி­றது.  அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் 500 ஏக்கர்  மகா­வலி காணியை  இதற்­காகப்  பெற்றுக்கொடுத்துள்ளார்.  இங்கு போதிக்கப்படவுள்ள கல்வி என்ன? வெளிநாடுகளிலிருந்து  இஸ்லாமிய மாணவர்கள், தீவிரவாதிகள்,  இப்பல்கலைக்கழகத்தில் கற்கைக்காக வருவதற்கு  வாய்ப்புண்டு. இதனை  அரசாங்கம்  அறியுமா?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்  ஐவேளை  பாங்கு சொல்வதற்கு இடமளிக்கப்பட்டது. அவ்வாறு  இடமளிக்காதிருந்தால் வஹாப்வாதிகள் வானொலியை   ஆக்கிரமித்திருப்பார்கள் என்று  அதன் அப்போதைய  தலைவர் ஹட்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  அரசின் நிலைப்பாடு என்ன? என்றார். 

No comments

Powered by Blogger.