Header Ads



போர் முடிந்த போதிலும், பயங்கரவாதம் முடிவுக்கு வரவில்லை - ரணில்

நாட்டில் போர் முடிவுக்கு வந்த போதிலும் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சகல நாடுகளும் எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பொது நோக்கத்துடன் பிராந்தியம் என்ற வகையில் வலுவாக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு பயங்கரவாதம் தொடர்பில் நீண்டகால அனுபவம் உள்ளது. அதிஷ்டவசமாக எம்மால் யுத்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

யுத்தம் அல்லது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததால் மாத்திரம் பயங்கரவாதம் முடிவுக்கு வராது.

இதனால், எமது பிராந்தியத்திற்கு உரியதையே நாம் செய்தோம். இரண்டு பிரதான கட்சிகளின் பங்களிப்புடன் நாங்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தோம்.

பிராந்திய நாடுகளுடன் வலுவான இருத்தரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் அதேவேளை பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள நாடுகளுடனும் இருத்தரப்பு உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னோக்கி செல்ல இருக்கும் ஒரே வழி இதுதான் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோல்பேஸ் ஹொட்டலில் இன்று நடைபெற்ற பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் உள்துறை அமைச்சர்களின் 8வது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.