Header Ads



அரசாங்கம் தேர்தலை, நடத்தாமல் இருக்கவில்லை - ஜனாதிபதி

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக அந்த சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்புக்கான உள்ளுராட்சி நிறுவன திட்டத்தை தயாரிப்பதற்காக இன்று (17) இலங்கை மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை என அரசியல் ரீதியிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், உண்மையில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருக்கவில்லை. உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தல் தொடர்பில் முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த சட்டத்திலுள்ள முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற தன்மை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாத நிலை உருவானதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நிரந்தரமான விஞ்ஞானபூர்வமான திட்டத்தை அமுல்படுத்தவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசியல் ரீதியான குறுகிய மனப்பாங்கின்றி மனச்சாட்சிக்மைய சிந்திக்கும் அனைவரும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கமும் முகம்கொடுக்க தேவையற்ற விதத்தில் நாட்டின் கழிவு பிரச்சினையை நிறைவு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மாகாண ஆளுனர்கள், முதலமைச்சர்கள், உள்ளுராட்சி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2017.07.17

1 comment:

  1. தேர்தல் நடந்தால் உனக்கு ஆப்புத்தானுங்கே...!!

    ReplyDelete

Powered by Blogger.