Header Ads



அமெரிக்காவில் சிறந்த, சமையல்காரியாக இலங்கையர் தெரிவு

அமெரிக்காவில் இலங்கை பெண் ஒருவர் சிறந்த சமையல்காரராகியுள்ளார். இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறிய பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார்.

அயோமா கருணாரத்ன என பெயர் கொண்ட குறித்த இலங்கை பெண், திருமணத்திற்கு பின்னர் அயோமா வைலன் என அழைக்கப்படுகின்றார்.

கண்டி மாஹாமாய பாடசாலையின் பழைய மாணவியான அவர் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவராகும். அவரது தந்தை பேராதனை பகுதியில் உள்ள மிகச்சிறிய கடை ஒன்றின் உரிமையாளராகும்.

கல்வி நடவடிக்கையில் அதிகம் திறமையான அவருக்கு வெளிநாட்டில் கற்பதற்கான புலமைப்பரிசில் ஒன்று கிடைத்துள்ளது. எனினும் அதனை பெற்றுக்கொள்வதற்காக 750 டொலர்களை அவரால் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் இலங்கையில் கேக் தயாரிக்க ஆரம்பித்த அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் செய்ய ஆரம்பித்துள்ளார். இதன்போது அவரை அமெரிக்கா நபர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றவர் சிறிய அளவிலான உணவகம் ஒன்றை அங்கு ஆரம்பித்துள்ளார். உணவகத்தில் அமெரிக்கர்களுக்கான இலங்கை உணவு சமைக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு உணவு பெற்றுக் கொள்ள வந்த அமெரிக்கா பெண் ஒருவர் இந்த உணவகம் தொடர்பில் பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அன்று முதல் குறித்த உணவகத்திற்கு அமெரிக்கர்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளார்.

நாளடைவில் பிரபலமடைந்த அந்த உணவகம் 2009ஆம் கலிபோர்னியாவில் சிறந்த உணவகமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு சிறந்த சமையல்காரருக்கான விருந்து வழங்கிய கௌரவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.