Header Ads



முஸ்லிம் நாடுகளுக்கான, எர்துகானின் வருகை வெற்றியில்லை


வளைகுடா நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர முறுகலுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் முயற்சியாக பிராந்தியத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் முன்னேற்றங்கள் ஏற்பட்டதற்கான எந்த சமிக்ஞையும் இன்றி தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று சவூதி அரேபியா சென்ற எர்துவான் மன்னர் சல்மானை சந்தித்த நிலையில் வளைகுடா பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்கும் குவைட்டுக்கு பயணித்து பின்னர் திங்களன்று கட்டார் சென்ற நிலையிலேயே அன்று மாலை நாடு திரும்பியுள்ளார்.

“துருக்கி ஜனாதிபதியின் வருகை புதிதாக எதனையும் கொண்டுவரவில்லை” என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சர் அன்வர் கர்காஷ் குறிப்பிட்டுள்ளார். “மேலும் மேலும் விஜங்களை விடவும் கட்டார் தனது நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவந்தால் சாதிக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதத்திற்கு உதவுவதாகக் குற்றம் சாட்டி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர மற்றும் போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன.

இந்த பிரச்சினையில் கட்டாரின் பலம்மிக்க நெருங்கி நட்பு நாடாக துருக்கி இருந்து வருகிறது.

எர்துவானுக்கு முதல் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்களும் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

No comments

Powered by Blogger.