Header Ads



எங்களுடைய நேரத்தை வீணடித்துவிட்டார்கள் - எர்துகான் குற்றச்சாட்டு


ஐரோப்பிய ஒன்றியம் தமது அங்கத்துவ விண்ணப்பத்தை இழுத்தடிப்புச் செய்து துருக்கியின் நேரத்தை வீணடித்ததாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் குற்றம்சாட்டியுள்ளார்.

பி.பி.சி தொலைக்காட்சியின் ‘ஹார்ட் டோக்’ நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த எர்துவான், துருக்கியால் தனது சொந்தக் காலில் நிற்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற 1987 இல் விண்ணப்பித்த நிலையில் அது பற்றிய பேச்சுவார்த்தை 2005 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் அந்த பேச்சுவார்த்தைகள் மந்த நிலையில் நீடிப்பதோடு பூர்த்தி செய்யப்பட வேண்டிய 35 சரத்துகளில் இதுவரை ஒன்று மாத்திரமே கடந்த ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் எர்துவான் கூறும்போது, “துருக்கிக்கு எம்மால் அங்கத்துவம் வழங்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தால் கூற முடியுமாக இருந்தால், எமக்கு அறுதல் அளிப்பதாக இருக்கும். அப்போது எம்மால் அடுத்த திட்டங்களை ஆரம்பிக்க முடியும்” என்று எர்துவான் சாடினார். 

No comments

Powered by Blogger.