Header Ads



கொழும்பில் விமான நிலையம் நிர்மாணிக்க, யோசனை முன்வைப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு இணையாக விமான நிலையம் ஒன்றை நிர்மாணிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிர்மாணித்தால், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லாது கொழும்பில் இருந்தே விமானத்தில் புறப்பட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரின் குப்பைகளை முகாமைத்துவம் செய்ய 10 ஆயிரம் பேரை கொண்ட படையணியை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஜூன் மாதம் கொழும்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரின் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

நிதி நகரமாக நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரில் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்.

கொழும்பு தெற்கு துறைமுக முனையத்திற்கு மேலதிகமாக கிழக்கு மற்றும் மேற்கு முனையங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் நிர்மாணிக்கப்படும்.

இவற்றை நிர்மாணித்த பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு புதிய பலம் கிடைக்கும். கொழும்பு துறைமுகத்தை பிராந்தியத்தில் மிகவும் வலுவான துறைமுகமாக மாற்றியமைப்போம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. பத்து வருடம் அப்போது நீயும் உனது அரசாங்கமும் எங்கே இருப்பீர்கள் ஏதோ அரபு நாட்டு மன்னர்கள் சொல்வதுபோல் சொல்கிறார்.

    ReplyDelete
  2. First offall 1.goid education2.good healthy service3

    ReplyDelete

Powered by Blogger.