Header Ads



சட்டங்கள் சிறுபான்மையினர் மீது, மட்டுமே பாய்கின்றன - அன்வர்

கிழக்கு மாகாணத்தில், சட்டத்தை இரு சாராருக்கும் ஒரேவாறு அமுல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,

தடைச்செய்யப்பட்ட சில சட்டங்கள் சிறுபான்மையினர் மீது மட்டுமே பாய்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.  

திருகோணமலை கந்தளாய் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் இடுபடும் சிறுபான்மை இன மக்கள், வீச்சுவலையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இதே தொழிலை பெரும்பான்மை இன மக்கள், அதிகாரிகளை தம்வசம் வைத்துக் கொண்டு செயற்படுத்துகின்றனர். இது, இன ரீதியான பாராபட்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

கிழக்கு மாகாணசபையின் 80 ஆவது அமர்வு தவிசாளர் சந்திரதாஸ கலபதி தலைமையில் நேற்றுக் காலை 9:15 க்கு ஆரம்பமானது. 

இதன்போது உறுப்பினர் டீ. மெத்தானந்த சில்லாவின் தனி நபர் பிரேரணையான அம்பாறையில் சிங்கள மீன்பிடி பரிசோதகரை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்விடயம் தொடர்பாக மாகாண விவசாய மீன் பிடி அமைச்சர் பரிசோதகர்களை அழைத்து விசாரித்து தீர்வு காணவேண்டும். இவ்வாறு தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மீன் பிடி முறைகளை பயன்படுத்தும்போது அச்சட்டம் சிறுபான்மையினர் மீதுமட்டும் பாய்கிறது எனத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.