Header Ads



மஹிந்தவும், சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தும்..!!

கடந்த வாரம் ஒரு முக்கிய செய்தியை சமூக ஊடகங்களிலும் பத்திரிக்கை வாயிலாகவும் படிக்கக் கிடைத்தது. அந்த செய்தியை படித்ததிலிருந்து இதனை சாதாரண மக்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அல்லாஹ் இப்போது அதற்குறிய சந்தர்ப்பத்தை தந்துள்ளான். அல்ஹம்து லில்லாஹ்.

ஆம், கடந்த வாரம் சிரி லங்கா தௌஹீத் ஜமாஅத் சார்பாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேரில் சந்தித்து திருக்குர்ஆனின் சிங்கள மொழியாக்கம் மற்றும் இதர புத்தகங்கள் சிலவும் கொடுத்ததாகவும், இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தௌஹீத் ஜமாஅத் சார்பில் பதில் கொடுக்கப்பட்டதாகவும், குறிப்பாக மஹிந்தவின் அரசாங்க காலத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்கள் விடயத்தில் மஹிந்த செய்த அநியாயங்கள் மற்றும் விட்ட பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த செய்தி விளம்பி நின்றது.

உண்மையில் தௌஹீத் ஜமாஅத்தினர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தமையோ, அல்லது அவருக்கு குர்ஆனை கொடுத்து விளக்கம் சொன்னமையோ, அவரின் பிழைகளை அவரிடமே முகத்தில் அறைந்தால் போல் போட்டுடைத்தமையோ எனக்கு எவ்வித ஆச்சரியத்தையும் அளிக்க வில்லை.  ஏன் என்றால், தௌஹீத் ஜமாஅத்தினர்கள் தவிர வேறு யாரும் இதனை செய்யமாட்டார்கள். தௌஹீத் ஜமாஅத்தினர் இதனை செய்யாமல் இருக்கவும் மாட்டார்கள் என்பது அவர்களைப் பற்றிய காய்தல் உவத்தல் அற்ற என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கு ஏலவே தெரிந்த செய்திதான். இதற்கு இவர்கள் தான் தகுதியானவர்கள்.

சிரி லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் மார்க்க விடயங்களில் மற்றவர்களைப் போல் சில மாற்றுக் கருத்துக்கள் கொண்ட ஒருவனாக நானும் இருந்தாலும் அவர்களின் சமூக அக்கரை, யாருக்கும் அஞ்சாத தற்துனிச்சல், அல்லாஹ்வுக்கு மாத்திரமே அஞ்சுவோம் என்கிற வார்தை, வாழ்கை செயல்பாடு போன்றவற்றில் எனக்கு ஆழ்ந்த ஈர்ப்பு உண்டு. இன்றைக்கு எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் பிரச்சாரப் பணிகள், சமுதாயப் பணிகள் என்று பலதை செய்து வந்தாலும் மக்கள் மத்தியில் எந்தப் பகுதியிலும் பேசுபொருளாக இவர்களே இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? நியாயமாக தேடிப் பார்த்தால் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து விட முடியும். 

ஆம், அவர்களுக்கும் நமக்கும் இடையில் ஏதும் மார்க்க பிரச்சினை இருந்தால் அதனை அவர்களிடமே நேரடியாக விளக்கம் கேட்க்கலாம் அல்லது நாம்  விளக்கம் சொல்லி அவர்களை திருத்தலாம். இதனை செய்வதே சிறந்த காலத்திற்கு ஏற்ற பணி. அதனை விடுத்து அவர்களை ஓரம் கட்ட நினைத்தால், வீன் விமர்சனங்களால் வீழ்த்த நினைத்தால் அது ‘சீச் சீ இந்தப் பழம் புலிக்கும்” என்ற நிலைக்கு நம்மை தள்ளி விடும்.

யாரும் செய்யாதவற்றை இவர்கள் செய்கிறார்கள். நான் அறிந்த வரையில் இதுவரை எந்த இஸ்லாமிய இயக்கங்களுமோ, தலைவர்களுமோ செய்யாத அரும் பணியை இவர்கள் செய்து வருகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் நிலையிலேயே அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினர் மஹிந்தவை பல தடவைகள் உத்தியோக பூர்வமான முறையிலேயே சந்தித்து பேசியுள்ளார்கள். அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பல தடவைகள் மஹிந்தவுடன் உறவாடி, உரையாடியுள்ளார்கள். மஹிந்தவின் அரசுக்காக ஜெனீவா வரை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையும் அதன் தலைவர்களான அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஆகியோர் சென்று வந்தார்கள். 

இப்படி மஹிந்தவுடன் நெருங்கிப் பேசும் வாய்ப்புகளை பல முறை பெற்ற அ.இ. ஜம்மிய்யதுல் உலமாவோ அதன் தலைவர்களோ, அல்லது அதன் போஷகர்களோ வாழ்வில் ஒரு நாள் கூட சிங்கள மொழியிலான திருக் குர்ஆனின் ஒரு பிரதியை ஜனாதிபதிக்கு கொடுத்ததில்லை. உண்மையில் அது அவர்களுக்கு முடியாத காரியமும் கூட. அது போல் தான், எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அஸ்கிரிய பீடத்தை வைத்திருப்பதைப் போல், ஜம்மிய்யதுல் உலமாவையும் முஸ்லிம் தரப்புக்கு வைத்திருப்பார்கள். இவர்களும் அதற்கேற்றாட் போல் நடந்து கொள்வார்கள்.

எந்த அரசின் பிழைகளையும் அதற்குறியவர்களிடம் அடித்துடைத்து சொல்லி தீர்வின் பக்கம் அரச தலைவர்களை நகர்த்துவதற்கு பதிலாக குனூத் ஓதுங்கள் என்று முஸ்லிம்கள் பக்கம் காய் நகர்த்துவார்கள். அடக்கி ஆளும் அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பதே ஜிஹாதில் மிகப் பெரியது என நபியவர்கள் கூறியுள்ள நிலையில் அந்த ஜிஹாதின் தேக்கரண்டியளவை  கூட ஜம்மிய்யதுல் உலமாவினர் செய்வதற்கு துணிந்ததில்லை. இதுவே கடந்த கால வரலாறு.

இனவாதத் தீயில் தம்புள்ளை பள்ளி சிக்கித் தவிக்கும் இன்று வரையிலான காலத்தில் அதற்குறிய எந்தத் தீர்வையும் உலமா சபையினாலோ, முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலோ கொண்டு வர முடியவில்லை. ஆனால் தம்புள்ளை பள்ளி என்றைக்கு உடைக்கப்பட்டதோ அது நடைபெற்று ஒரு மூன்று நான்கு நாட்களுக்குள் (என் நினைவு சரியானது என்றால்) தௌஹீத் ஜமாஅத்தினர் கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் அரசை கண்டித்தார்கள். பள்ளிக்கு விமோசம் வேண்டும் என்று பாதையில் இருந்து கத்தினார்கள், கதரினார்கள். அவர்களின் குரல் அரசுக்கு கேட்டதோ இல்லை. பள்ளிக்காகவும் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுத்த தௌஹீத் ஜமாத்தினரை வசை பாடி ஆற்றப்பட்ட மிப்பர் உரைகள் எம் காதில் விழுந்தன.

சானக்கியமற்றவர்கள், எதிர்கால திட்டமில் தெரியாதவர்கள், விவேகமற்றவர்கள் என்றெல்லாம் அன்றும், இன்றும், தேவைப்பட்டால் நாளையும் இதே தௌஹீத் ஜமாஅத்தை பற்றி பலர் தங்களை தாங்களே மேதாவிகள் என்று நினைத்துக் கொண்டு கருத்து சொல்கிறோம் என்ற போர்வையில் தரம் தாழ்த்த நினைப்பார்கள். நானும் அப்படி நினைத்த காலமுன்டு. ஆனால் தாம் இப்படியெல்லாம் விமர்சிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் தமது காரியங்களின் மூலம் தாம் வித்தியாசமானவர்கள், சமுதாயப் பற்றுள்ளவர்கள், இஸ்லாத்திற்காக செயல்படுபவர்கள் என்பதை நேரடியாக நிரூபித்துள்ளார்கள் தௌஹீத் ஜமாஅத்தினர் என்பதே வரலாறு.

இது ஜம்மிய்யதுல் உலமாவை விமர்சிப்பதற்கான எனது வார்த்தைகள் அல்ல. உண்மை பல பொழுதுகளில் கசப்பாக இருந்தாலும் சொல்லியே தீர வேண்டியது நிர்ப்பந்தம் என்ற வகையில் குறிப்பிடுகிறேன். தௌஹீத் ஜமாஅத்தினர் வெளியிட்ட சிங்கள மொழியிலான குர்ஆன் வெளியீட்டு விழா பலராலும் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அவற்றையெல்லாம் தாண்டி குர்ஆனை சிறப்பாக வெளியீடு செய்து முடித்தார்கள். அவர்கள் வெளியிட்ட குறித்த குர்ஆனை படிக்கும் வாய்ப்பை பெருகிறவர்கள் கண்டிப்பாக அதனை படித்துப் பாருங்கள். அதன் எளிய மொழியாக்கத்தையும், அதில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தையும் படிக்கும் போது கண்கள் கலங்குகின்றன.

இதனை வெளியிடுவதையா தடுக்க நினைத்தார்கள்? என்பதை நினைக்கும் போது வெருப்புத் தட்டுகிறது உள்ளத்தில்.  இந்தக் காரியங்களை இவர்களைத் தவிர யாரால் செய்ய முடியும்? சிங்களம், தமிழ் மொழிகளில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் பகிரங்க நிகழ்வுகளை நடத்தி மாற்று மத நண்பர்களை இஸ்லாம் பற்றி கேள்வி கேட்க்க வைத்து அதற்கு அறிவுப்பூர்வமாக பதிலளித்து மாற்ற மத மக்களின் மனங்களையும் கவரும் செயல்பாட்டை செய்து வருகிறார்கள். அண்மையில் அவர்கள் நடத்திய ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பொது பல சேனாவின் பிரதிநிதி ஒருவரே அந்த நிகழ்வை பாராட்டி பேசியிருந்தமை வீடியோக்களில் பார்க்க கிடைத்தது. இந்த நிகழ்வின் வீடியோ பதிவுகளும் மஹிந்தவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

பாராட்டுக்கள் தோழர்களே! இனவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடமே அவரின் தவறுகளையும், இனவாதத்தின் வலிகளையும் பகிரங்கமாக பட்டியலிடும் தைரியம் இவர்களை தவிர யாருக்கு வரும்? இறைவன் இவர்களுக்கு கொடுத்துள்ளான். அது அவன் செய்ய அருள். அரசியல்வாதிகளுக்கு கை கொடுப்பதும், பக்கத்தில் அமர்வதும், செல்பி அடித்து முகநூலில் பகிர்ந்து விட்டு எத்தனை லைக், எத்தனை ஷெயார் என்று பார்த்துக் கொண்டும், கொமன்டுக்களை படித்துக் கொண்டும் காலம் கழிக்கும் மௌலவி மார்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் மத்தியில் தௌஹீத் ஜமாஅத்தினரின் போங்கு வித்தியாசமானது.

இது இவர்களினால் மாத்திரமே முடியும். மஹிந்தவுக்கு குர்ஆன் கொடுக்கும் போது, அவர் வுழு செய்திருந்தாரா? இல்லையா? என்ற பட்டிமன்றத்திற்கு முன். இது வரை யாரும் இதனை செய்யவில்லையே! இவர்கள் செய்தார்களே! என்ற ஒரு காரணத்திற்காகவாவது அமைதிகாக்க வேண்டாமா? உங்கள் பயணம் தொடரட்டும்! என் போன்ற சாமானியர்களின் தோழமை உங்களுக்கு உண்டு! உங்கள் மீதுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் எங்கள் குரல் உங்களுக்காக இப்படியாவது ஒலிக்கும்! உங்கள் மூலம் நன்மையடையும் இந்த சமுதாயத்தின் ஓர் சாமானியனாக உங்கள் பணியை உயர் பணியாக மதிக்கிறேன். இறைவனிடம் பிரார்திக்கிறேன்! காலம் கணியும், இன்ஷா அல்லாஹ்.  உங்கள் மூலமாவது இந்த இலங்கை முஸ்லிம் உம்மாவுக்கு விடிவு கிடைக்க இறைவன் வழி செய்வான் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்.

-முனீப் அப்துல் காதர் - மட்டக்குளிய

14 comments:

  1. Yes. You can appreciate some works of SLTJ, but not by accusing/underestimating ACJU. Why the SLTJ met the FORMER president?
    Why can't meet the present president and rulers?
    SINCERE INTENTION could do anything.

    ReplyDelete
  2. நல்ல பதிவு அல்லாh அக்பர்

    ReplyDelete
  3. During Mahinda's ruling , jamath-e-islami gave thafheem-ul-quran sinhala translation to primi minister DM jayarathne officially at the BMICH

    ReplyDelete
  4. ஸுப்ஹானல்லாஹ்.காலத்துக்கு தேவையான விளக்கமான பதிவு.
    முனீப் அப்துல் காதர் போன்று எமது உதவியும் என்றென்றும் sltj க்கு உண்டு.

    ReplyDelete
  5. Alhamdulillah! A great dare mission ever!

    ReplyDelete
  6. பலமான அடியாக அமைந்த கட்டுரை உண்மையை உரக்கச் சொல்லும்போது எங்காவது இடிக்கத்தான் செய்யும் ,அதை சிந்தித்தால் உண்மை வெளிவராது,ஜெனிவா சுற்றுப்பிரயாண ஆசையால் பல தடவை இந்த சமூகம் ஏனைய சிறுமான்மைக்கு முன்னால் தலை குனிந்து நிற்கிறது.

    ReplyDelete
  7. Don't say shirk words
    Only can be done by Thowheed Jamaath
    Already AlQuran Singhala version given
    Ok Don't underestimate Ulama especially Mufthi
    It shows Ur Cheat fellow

    ReplyDelete
  8. இந்த‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் உல‌மா க‌ட்சியின‌ர் ம‌ஹிந்த‌வை ச‌ந்தித்த‌ போது அவ‌ர‌து த‌வ‌றுக‌ளை நேர‌டியாக‌ சுட்டிக்காட்டிய‌து. இவை ஊட‌க‌ங்க‌ளிலும் வ‌ந்த‌ன‌. இவ‌ர் ஊட‌க‌ங்க‌ளை ப‌டிப்ப‌தில்லை போலும்.

    ReplyDelete
  9. I wonder this much of idiots do not understand the real politics in sri lanka. may allah grant us rite path of wisdom.

    ReplyDelete
  10. Masha Allah.. great job! let them continue....

    ReplyDelete
  11. சில தவறுளைத் திருத்திக்கவும், அவர்களின் ஒப்பற்ற பணிகள் ஓயாது செல்லவும் பிரார்த்திப்பது நியாயமானவர்களின் கடமை

    ReplyDelete
  12. SLTJ காய் நகர்த்தும் வேலையை செய்யாது என்று நன்பும் அளவில் இதுவரை இருந்தது இதன் பிறகும் இருக்க அல்லாஹ் உதவி செய்வானாக பொது விடயங்களில் இவர்களின் நன்னடத்தை உச்ச கட்டத்தை தொட்டுள்ளது யாரும் மறுக்க முடியாது அது போன்றே பொது சிவில் சட்டம் (இஸ்லாமிய) விடயத்தில் இவர்களின் இஸ்லாமிய கருத்து உள்வாங்கப்படணும்

    ReplyDelete

Powered by Blogger.