Header Ads



வவுனியா பெருநாள் தொழுகை, நடந்தது என்ன..?


-ARA.Fareel விடிவெள்ளி-

கடந்த திங்­கட்­கி­ழமை காலை வேளை நாடெங்­கிலும் முஸ்­லிம்கள் பெருநாள் தொழு­கையில் மூழ்­கி­யி­ருந்­தார்கள். முப்­பது தினங்கள் பசித்­தி­ருந்து, தமது நேரத்தில் பெரும் பகு­தியை இறை­வ­ணக்­கத்­திலும், துஆ பிரார்த்­த­னை­க­ளிலும் ஈடு­பட்ட மக்கள் புனித ரமழான் மாதத்­துக்கு விடை கொடுத்த மறு­தினம் பெருநாள் மகிழ்ச்­சியில் திளைத்­தி­ருந்­தார்கள். 

அன்று தான் வவு­னி­யாவில் பெருநாள் தொழு­கையில் ஈடு­பட்ட மக்கள் கம்­பி­க­ளி­னாலும் தடி­க­ளி­னாலும் கோர­மாகத் தாக்­கப்­பட்­டார்கள். அவர்கள் திடலில் பெருநாள் தொழு­கையை நிறை­வேற்­றி­யமை குற்­ற­மாக ஒரு குழு­வி­னரால் கரு­தப்­பட்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. 

அது வவு­னி­யாவில் அமைந்­துள்ள சூடு­வெந்த புலவு (அல்­கைமா சிட்டி) எனும் கிரா­ம­மாகும். புதி­தாக உரு­வான கிராமம். சுமார் 15 முஸ்லிம் குடும்­பங்­களே வாழ்­கின்­றன. அக்­கி­ராம மக்­க­ளுக்­கென புதிய பள்­ளி­வா­ச­லொன்று கூட இன்னும் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை, வீடொன்­றிலே அக்­கி­ராம மக்கள் தங்கள் மார்க்கக் கட­மை­களை நிறை­வேற்றி வரு­கி­றார்கள். இஸ்­லா­மிய ஒன்­றியம் எனும் அமைப்பு இதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளது.

பெரு­நா­ளன்று கிராம மக்கள் ஜவாஹிர் மெள­ல­வியின் வீட்டு முன்­றலில் திடல் தொழு­கையில் ஈடு­பட்­டார்கள். பெருநாள் தொழு­கையின் பின்பு அஷ்ஷெய்க் ராபிக் ஸஹ்வி மௌலவி பயான் நிகழ்ச்­சியை நடத்திக் கொண்­டி­ருந்தார். அச்­சந்­தர்ப்­பத்­திலே கிரா­மத்­தி­லி­ருந்து வந்த மாற்றுக் கொள்­கை­யு­டைய குழு­வினர் அங்­கி­ருந்த மக்கள் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டனர். 

அப்­போது தொழு­கையை நிறைவு செய்­து­விட்டு அங்கு சுமார் 50 க்கும் மேற்­பட்ட மக்கள் மார்க்க உப­தே­சத்தை செவி­ம­டுத்துக் கொண்­டி­ருந்­தனர். இவர்­களில் ஆண்கள், பெண்கள், சிறு­வர்கள், சிறு­மிகள் என்று பலரும் அடங்­கி­யி­ருந்­தனர். 

திடீ­ரென அங்கு பிர­வே­சித்த மாற்றுக் கொள்­கை­யு­டைய குழு­வினர் திடலில் பெருநாள் தொழுகை அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி அங்­கி­ருந்­த­வர்­களை கம்­பி­க­ளி­னாலும் பொல்­லு­க­ளாலும் தாக்­கு­வ­தற்கு ஆரம்­பித்­தனர். பெண்­களும், சிறுவர், சிறு­மி­யர்­களும் தாக்­கப்­பட்­டனர். பலர் காயங்­க­ளுக்கு உள்­ளா­னார்கள். 

62 வய­தான வயோ­திபர் ஒருவர் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்டு பலத்த காயங்­க­ளுக்­குள்­ளானர். அவ­ரது மூன்று பிள்­ளைகள் மற்றும் மனை­வியும் தாக்­கப்­பட்­டனர். படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளான வயோ­திபர் வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்­று­வ­ரு­கிறார். அவ­ரது காயத்­திற்கு வைத்­தி­ய­சா­லையில் 6 தையல்கள் போடப்­பட்­டுள்­ளன. மேலும் மூவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சையின் பின்பு வெளி­யே­றி­யுள்­ளனர். 

எமக்குள் ஏன் இந்த பிளவு?-
நாட்டின் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரா­கவும் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களுக்கெதிராகவும் பேரினவாத குழுக்கள் செயற்பட்டு வரும் நிலையில் எமக்குள் நாமே பிளவுபட்டு தாக்குதல்களில் ஈடுபடுவது ஆபத்தானதாகும்.

முஸ்லிம்களுக்கிடையில் சமய பிரிவுகள் இருக்கின்றன. இதனால் அவர்களே அவர்களது பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால் எம்மீதே குற்றம் சுமத்துகிறார்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமையக்கூடாதென்பதே சமூகத்தின் நிலைப்பாடாகும்.
பிரிந்திருக்காது ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே நாம் எம் நாட்டில் தலைநிமிர்ந்து உரிமைகளுடன் வாழலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.