Header Ads



பசில் - நாமல்உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக 12 வழக்­குகள்

பசில் ராஜ­பக்ஷ, நாமல் ராஜ­பக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களின் பின்னர் மேல் நீதி­மன்­றங்­களில் 12 வழக்­குகள் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளன.

இது­வரை நிதிக் குற்றப் புல­ன­ய் வுப் பிரி­வுக்கு கிடைக்கப் பெற்ற 335 முறைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் செய்­யப்பட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த 12 வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும், 89 சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நிறை­வ­டைந்து கோ­வைகள் சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் 131 சம்­ப­வங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும்   பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவான் குணசே­கர தெரி­வித்தார்.

அரச தகவல் திணைக்­க­ளத்தில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் நட­வ­டிக்­கை­களை தெளி­வு­ப­டுத்தும் விஷேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

நிதிக் குற்­றங்கள் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில் அக்­குற்­றங்கள் வெளி­நா­டுகள் ஊடா­கவும் இடம்­பெற்­றுள்­ளமை தொடர்பில் சான்­றுகள் உள்­ளதால் 25 நாடு­க­ளுடன் அந்­தி­யோன்ய அடிப்­ப­டையில் தக­வல்­களைப் பெற்று விசா­ர­ணைகள் நடாத்­தப்ப்ட்டு வரு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இந் நிலையில் இது­வரை நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரி­வி­னரால் 56 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்ப்ட்­டுள்­ள­தா­கவும் 10 பேர் நீதி­மன்­றங்­களில் சர­ண­டைந்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

 நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரி­வினர் இது­வரை செய்­துள்ள விசா­ர­ணைகள் கார­ண­மாக 237.5 மில்­லியன் ரூபா சொத்­துக்கள் அரச உட­மை­ய­க­கப்ப்ட்­டுள்­ள­துடன் மேலும் 400 மில்­லியன் சொத்­துக்கள் அரச உட­மை­யாக்­கப்­படும் செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.

No comments

Powered by Blogger.